பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1333

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

774 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை சிலைபகஎண் டிக்குத் திகிரிகளும் பத்துத் திசைகளினுந் தத்தச் செகமேழுந்: திருகுசிகண் டிப்பொற் குதிரைவிடுஞ் செட்டித் திறல கொடும் பைக்குட் பெருமாளே. (1) கீரனுார். (பழநிக்கு வடக்கு 10 மைல். தாராபுரம் போகும் வழி) 956. வேசையர் மீதுள மயக்கு அற தான தானன தத்தன தத்தன தான தானன தத்தன தத்தன தான தானன தத்தன தத்தன தனதான tஈர மோடுகி ரித்துவ ருத்தவும் நாத சீதந டிப்பிலு ருக்கவும் ஏவ ராயினு மெத்திய ழைக்கவு மதராஜன். #ஏவின் மோதுக ணிட்டும ருட்டவும் வீதி மீதுத லைக்கடை நிற்கவும் ஏறு மாறும ணத்தினி னைக்கவும் விலைகூறி. ஆர பார தனத்தைய சைக்கவு மாலை யோதிகு லைத்துமு டிக்கவும் ஆடை சோரஅ விழ்த்தரை சுற்றவும் அதிமோக ஆசை போல்மன இஷ்டமு ரைக்கவு மேல்வி ழாவெகு துக்கம்வி ளைக்கவும் ஆன த்ோதக வித்தைகள் கற்பவ ருறவாமோ Xபார மேருப ருப்பத மத்தென நேரி தாகஎ டுத்துட னட்டுமை பாக ராரப டப்பணி சுற்றிடு கயிறாகப்

  • செட்டி - முருகவேளுக்கு ஒரு பெயர் முருகன் வேள் செட்டி யாறு முகன் குகன் குழகன் மாயோன் மருகன்" - சூடாமணி நிகண்டு. செட்டி யெனுமொர்திரு நாமக்கார" - திருப்புகழ் 1026 - பாடல் 215 பக்கம் 48-கீழ்க்குறிப்பைப் பார்க்க

f ஈரம் - அன்பு "ஈரமும் குருசீர்பாதசேவையும்" பாடல் 100, "ஆனைக்காவுடை ஆதியை நாளும் ஈரமுள்ளவர் நாளும் எம்மையும் ஆளுடையாரே"- சுந்தரர் 7.75-7, 4 ஏ வின் - அம்பு போல. X கடல் கடைந்த வரலாறு. பாடல் 509-பக் 162 கீழ்க்குறிப்பு.