பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1342

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை) திருப்புகழ் உரை 783 (தரித்து மண்டையில்) மண்டை ஒட்டை எடுத்து ஏந்தி அதில் ரத்தத்தைப் பிடித்துப் பருகக் கூட்டமான ப்ருந்துகள் குடல்களைப் பிடுங்க (கிட்ைக்கும் உணவைக் கண்டு, க்ளிப்புறும் நரிகள் தாம் உண்ணும் மாமிசத்தைச் சிந்திச் சிதறப்போர் செய்த வேலனே! (தடம்) பெருமை வாய்ந்த மயில் மீதும், வயலூர் என்னும் தலத்திலும், அன்பு பொருந்தியுள்ள (அடியார்களின்) நெஞ்சகத்தும், தி நிறைவுற்ற கொங்கு நாட்டில் தனிச்சயம் என்னும் தலத்திலும் இன்பத்துடனே வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே! (உயிர் அலமரும் அன்றைக் கருள்வாயே) மதுரை 960. கணக்கற்ற அசுரர்களைக் கொன்று அழித்த தோள் - என்று (உனது தோளைப்) புகழ்ந்தும், கிரவுஞ்ச மலையைத் தொளை படும்படி ஊடுருவிச் சென்ற வேல் என்று (உனது வேலைப்) புகழ்ந்தும், அழகிய பொன்னாலாய தண்டை சூழ்ந்துள்ளதும், தாமரை போன்றதுமான அடி என்று (உனது திருவடியைப்) புகழ்ந்தும், (முடியிற் கொண்ட கூதளம் என) கூதாளம் கொண்ட முடி என . வெண்தாளியினது தண்ணிய பூவை அணிந்துள்ள முடி என்று 蠶 திருமுடியைப் புகழ்ந்தும், (வனசரி) வேட்டுவச்சியாம் வள்ளியை அணைந்த மார்பு என்று (உனது திருமார்பைப்) புகழ்ந்தும், ஆறுமுகம் என்று (உனது ஆறு திருமுகங்களைப்) புகழ்ந்தும், உள்ளம் நெகிழ்ந்து, என்னுன்ட்ய எலும்பெல்லாம் உருகும்படியான அன்பு எனக்குக் கூடாதோ' (கிட்டாதா என்றபடி) (தொடர்ச்சி) தடம் - பெருமை (திவாகரம்) அருளினன் தடமிகு நெடுவாள்" - சம்பந்தர் 3-119-8,

  1. நிறைபெற்ற அடியார்கள் நெஞ்சுளானே"

"அன்பரானவர் வாயினு ளத்தனே" - -சம்பந்தர் 1-119.4, 3-115-11. X கூதளம் - வெண் கூதாளத்துத் தன்யூ". வெண்தாளியினது தண்ணிய பூ - பட்டினப்பாலை உரை 85. (தொடர்ச்சி 784 ஆம் பக்கம் பார்க்க)