பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1344

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை) திருப்புகழ் உரை 785 கல கல கல என்னும் பேரொலியுடன் கண்ட பேர்களுடனே கூச்சலிட்டுச் சமயக் குற்றங்களை எடுத் துப் பேசி வாதம் செய்வோர்கள் உரக்கக் கத்தும் பல சொற்களாம் சேறு அல்லது குற்றம் ஆகும் (பொங்கு அளாவும்) கொதிப்பைப் பொருந்திய சாத்திரநூல் உணர்ச்சியெல்லாம் ஒழிந்து நீங்க பஞ்சபூதங்களால் (மண், நீர், தி, காற்று, விண் எனப்படும்) ஐம்பூதங்களின் செயல்களும் அடங்கி நீங்கச் சொல்லப்புகின் (எப்போதும் தனது சேஷ்டை) துஞ்சுறாதன . ஒய்தல் இல்லாத (கரணம்) (அந்தக் கரணம்) மனம் ஒடுங்கி ஒழிய, நீ எனக்கு உபதேசித்தருளிய ஞானத்துக்கு உள்ள பெருமை தான் என்ன ஆச்சரியகரமா யுளது! நல்ல விளக்கமுள்ள கடலை, கற்கண்டு, தேன், இவைகளுடன் ருசிகரமான (தினைப்பிண்டி) தினைமாவு, வெல்லம் இவற்றை மகிழ்ச்சியுடன் உண்ணுதலைச் செய்யும் எம்பெருமான், ஒற்றைக் கொம்பால் எழுதியருளுக என (வியாச முநிவர்) வேண்ட, முன்பு பாரதக் கதையை, வடக்கே உள்ளதும் கனத்த சிகரங்களை உடையதுமான செம்பொன் மல்ையாம் மேரு மலையில் எழுதினவனும், பவளமலை அனையவனும் ஆகிய கணபதி அன்று தாதையைச் (சிவபெருமானை)ச் சுற்றிவந்து வலம் வரும் நேரத்துக்குள் மிகக் கொடிய காற்றின் வேகத்தினும் மேம்பட்ட வேகத்துடன் எட்டுத் திசையிட்ங்களைக் கொண்ட உலகம் முழுவதையும் பார்த்து, பாம்பை உண்டு உலவுகின்ற பச்சைத் தோகையைக் கொண்ட செம்மையுற்ற பட்சியாகிய மயில் வாகனத்தின் மீது வந்த முருகச் சரபமே! என்று புகழ்ந்து மதுரைத் தலத்தில் வழிபட்டுத் தேவர்கள் தொழுகின்ற் தம்பிரானே! (ஞான மிருந்தவர்றென்) (தொடர்ச்சி) 4 விநாயகர் - பவள நிறத்தினர் - பாடல் 441-பக்கம் 608 கீழ்க்குறிப்பு. 4 x உலகை வலம் வந்தது - பாடல் 184-பக்கம் 30 கீழ்க்குறிப்பு. O சிம்புள் - சிங்கத்தைக் கொல்லவல்லதாகக் கூறப்படும் எண்காற் புள்.

  • இந்தப் பாடலில் (ஒவ்வோரடியின் ஈற்றுச் சந்தத்துக்கு முன் சந்தம்) தொங்கலொடு பொருந்தும் வழியெதுகை அழகைக் காண்க