பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை திருப்புகழ் உரை 787 961. னை முகத்தைக் கொண்ட கணபதிக்கு நேராகப் பின் தோன்றிய இளையவனாம் அன்பனே! ஆறு திருமுகங்களைக் கொண்ட (வித்தக) ஞானியே! தேவர்களுக்கு அரசாம் தலைவனே! முதல்வராம் சிவபெருமானுக்கும், வேதத் தலைவனாம் பிரமனுக்கும் வேதப்பொருள் உபதேசித்த குருநாதனே! அசுரர் குலத்தை வாள்கொண்டு வெட்டி அழித்த (சால்சதுர் மிகுத்த சதுர் சால் மிகுத்த சாமர்த்தியம் நிறைந்த மிகுந்துள்ள பராக்ரமம் வாய்ந்த வீரனே! உனது திருவடிகள் இரண்டையும் தியானித்துப் பொருந்துதலைக் கொண்ட பதவியில் நல்வாழ்வுடன் (நான்) விளங்கும்படி அருள்புரிவாயாக விண்ணுலகம் ஆதிய எழுவகைப்பட்ட உலகத்தினர்க்கும். திருமாலுக்கும், பிரமனுக்கும், வேறு எவர்க்கும் அறிய முடியாத சிறந்த மதுரைத் தலத்துச் சொக்கேசரும், மாது பார்வதியும் மகிழ்ச்சியுறும்படி, அழகிய மயிலைச் செலுத்தி நடத்தும் முருகனே! தேன் உண்டாகும் (வள்ளிமலைக்) காட்டில் மான்போலும் கண்ணைக் கொண்ட குறத்தி - வள்ளி (உன்னைச்) சேரும்படி (அவளிடம்) அணுகிய திரண்ட தோளனே! தேவர்களின் உள்ளத்தில் (சூரன் பொருட்டு) இருந்த பயத்த்ை வேலாயுதங் கொண்டு நீக்கிய பெருமாளே! (வாழ்வொடு சிறக்க அருள்வாயே) 962. எல்லாராலும் போற்றப்படும் நீண்ட கிரணங்களை உடைய சூரியன் உலகெலாம் விரும்பும்படி உலாவரும் காட்சி தானோ இது இந்தத் திருவடி என்று சிறப்பித்தும் tt (தொடர்ச்சி) சூரியன் உலகோர் விரும்பும் உலாவருவதனால் (பகர வளங்கள்) அழகிய வளங்கள் பலவும் இலகி விளங்குகின்றன. (தொடர்ச்சி 788 ஆம் பக்கம் பார்க்க.)