பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை) திருப்புகழ் உரை 795 சேர்ந்துள்ள சித்திரப் பதுமையோ இவ் வுருவம் என்று சொல்லும்படி உடலை மினுக்கி மிக்க காமப் பற்றையும் நட்ப்ைபும் வரப்பண்ணி அரையிற் கட்டியுள்ள (வரி) கோடுகள் உள்ள (அல்லது அரி அழகுள்ள) புடைவை கணுக்கால் ஆளவும் தொங்கும்படி விட்டி (அழகாக நடந்து (கில்ாப மயிலின்) தோகை விளங்கும் மயிலின் இனமாமென்று சொல்லும்படி வந்தவர்களை வெருட்டியும், நடித்தும், தங்கள் வலையில் விழும் பேர்வழிகளைத் தம்மை இரந்து வேண்டும்படியான வழிக்குக் கொண்டுவர (இட்டுகொடி) கொடியிட்டு துவசம் கட்டியும் . முயன்று நின்றும் - சாதற்கே நோயும் பிணியும் தந்து (நோய்பிணி வரும்படிச் செய்து), துன்பம் உண்டு பண்ணுபவர்களாம் (வேசையர்தம்) பக்கத்தே வேசையரிடத்தினுள் வேசையர்பால் - பாய்ந்து, (காமத்தில்) முழுகி, அறிவு கெட்டு, துன்பம் அடைந்தவனை, பாவ்த்துக்கு காரணமான பிறவிக் கடலில் உழன்று பிரயாசைப் படுபவனை, மாலைகள் விளங்கும் உனது (ப்தபத்தியில்) திருவடிப் பத்தியில் - திருவடியைப் பத்தி செய்யும் நிலையில் என்னை நீ இருத்தி வைப்பதும் எந்த நாளிலோ! என்றைக்கோ! திருவாதவூரில் அவதரித்த மாணிக்க வாசகரைக் குறிக்கொண்டு, ஒரு குருமூர்த்தியாக நின்று, ஞான பாதத்தை (முத்திக்கு வழிக்ள்ான சரியாபாதம், கிரியாபாதம், யோக பாதம், ஞானபாதம் என்ற நால் வகையான சைவ சமய மார்க்கங்களுள்) ஞான மார்க்கத்தை அவருக்கு (வெளியிட்டு) வெளிப்பட உபதேசித்தும், நரிகளின் கூட்டத்தைக் குதிரை. களாம்படி நடத்தின் (நட்த்து) ஒரு திருவிளையாடலில் (உவகை உற்று) மகிழ்ச்சி பூண்டும், பாண்டியன் (தனது) அன்பு தோன்ற 蠶 பொன்னாடை தர, அதை வாங்கிச் கொண்டு, முன் த்தும், வைகை யாற்றங்கரை மீது கூத்தாடி மண் எடுத்து மகிழ்ந்தும், (மாது வாணி) பிட்டு வாணிபம் செய்த மாது வந்தியம்மையார் தந்தை பிட்டை உண்டும் (விளையாடின) பித்தனால் (சிவபிரான்) பெற்றருளிய கந்த வேளே!