பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1362

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை) திருப் புகழ் உரை 803 பிழையிலா வகையில் ஆட்சி செய்வதற்கே தோன்றிய தமிழ் வளர்த்த (கூன்) பாண்டியரின் சுரத்தொடு கூனும் அன்று நீங்கித் (தி ஆலவாயில்) மதுரைத் திரு ஆலவாய்த் திருக்கோயிலில் சிற்ந்து வீற்றிருக்கும் பெருமாளே! (தாளைப் பரிந்து தரவேணும்) 967. ஏலப் பணி நீர் - (ஏலம்) மயிர்ச் சாந்தும், பன்னிரும் மேற்கொள்ளும் மாதர்களின் இசை(ப்) பாடல் மீதும், அவர்கள் உறவாடிப் பேசும் (ஈரத்தினும்) அன்பு மொழிகள் மீதும், வளையல் அணிந்த கரங்களின் மீதும் (ஏமக்கிரி) பொன்மலை (மேருமலை) மேலே, கரிய நீல (கயம்) II.JГГGLTMG-ЛТ ஏறிய தன்மையதாமென்னும்படிப் (பொன்னிறக் கொங்கைகளின் மீது கரிய நீல முலைக்காம்புகள்) பொருந்தினவாய் விளங்கும் அழகிய கொங்கைகளின் மீதும் காம இச்சை பூண்டு. சோலையில் உள்ள குயிலினி குரல் போன்ற பேச்சுக்களாலும், ஆடை அணிந்துள்ள நூல் போன்ற இடையாலும், குற்றமில்லாத வாழைக்கு ஒப்பான தொடையாலும், நிலவொளி வீசிடும் அழகிய முகத்தின் மினுக்கு நடிப்பாலும், பெருமை வாய்ந்ததும் விஷம் கொண்டதுமான (அல்ல அழகியதும்,கடுமை வாய்ந்ததுமான) வேல் போன்ற கண்களின் சூது (அதினும்) சூதிலும், நான் வீணாகவே நாள்தோறும் அலைச்சல் உறுவேனோ! விஷங்கொண்ட பாம்பின் (ஆதிசேடன்) மேலே (அல்லது ஆல்-ஆலிலையில் அந்தப் பாம்பின் மேலே) குற்றமற்ற (ப்ாற்) கடலிடையே அறிதுயில் கொண்டுள்ள மாதவன் - (பெரியோன்) கஜேந்திரனுக்கு அன்புடனே உதவி செய்தருளிய பெரிய மாயன் (தொடர்ச்சி)o "ஆலத் திலையான் அரவின் அணைமேலான் நீலக் கடலுள் நெடுங்காலம் கண் வளர்ந்தான்" பெரியாழ்வார் 2-6.6 * கஜேந்திரனுக்கு உதவியது - பாடல் 939-பக்கம் 731 கீழ்க்குறிப்பு.