பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

810 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 971. சிவம் பெற தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தத்ததன தனதான *முத்து நவ ரத்நமணி பத்திநிறை சத்தியிட மொய்த்தகிரி முத்திதரு வெனவோதும். முக்கணிறை வர்க்குமருள் வைத்தமுரு கக்கடவுள் 1 முப்பதுமு வர்க்கசுர ரடிபேணி: பத்துமுடி தத்தும்வகை யுற்றகணி விட்டஅரி

  1. பற்குணனை வெற்றிபெற ரதமூரும். பச்சைநிற முற்றபுய லச்சமற வைத்தபொருள்

பத்தர்மன துற்றசிவம் அருள்வாயே: தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு தெய்த்ததென தெய்த்ததென தெனனான. திக்குவென மத்தளமி டக்கைதுடி தத்ததகு செச்சரிகை செச்சரிகை யென ஆடும்; X அத்தனுட னொத்தநட நித்ரிபுவ னத்திநவ சித்தியருள் சத்தியருள் புரிபாலா.

  • இந்த 971ஆம் பாடலின் முதல் நாலடிகளின் கருத்து முத்தைத்தரு பத்தித் திருநகை எனத் துவக்கும் முதற் பாடலின் முதல் நாலடியின் கருத்தை ஒருவாறு தழுவும்.

f முப்பத்து மூன்று வகைத் தேவர்கள்: "நால் வேறியற்கைப் பதினொரு மூவரொ டொன்பதிற் றிரட்டி உயர்நிலை பெlஇயர்" - என வரும் திருமுருகாற்றுப்படை உரையில் - ஆதித்தன், உருத்திரன், வசு, மருத்துவன்என நான்குகூறாய்ப் பகுக்குங்கால், ஆதித்தர் பன்னிருவர், உருத்திரர் பதினொருவர், வசுக்கள் எண்மர், மருத்தவர் இருவர் ஆக முப்பத்து மூவராயினர் - எனவிளக்கம் தரப்பட்டுளது.

  1. பற்குனனை பற்குணன் அருச்சுனன். அருச்சுனனுக்குத் திருமால் தேர்ச் சாரதியானது - பாடல் 229-பக்கம் 72-குறிப்பு 4

X அத்தனுடன் ஒத்த நடணி: "அணங்கினொ டாடல் புரி எந்தை". "இணைபிணை நோக்கி நல்லாளோ டாடும் இயல்பினராகி" சம்பந்தர் 1-133-1:3-101-6.