பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை) திருப்புகழ் உரை 811 971. முத்தும், நவரத்ன மணிகளும் வரிசையாக நிறைந்து விளங்கும் (சத்தி) பார்வதிதேவி தமது இடது பாகத்தில் நெருங்கியுள்ள (கிரி) மலையன்ன சிவன், முத்திக் கனியை அளிக்கும் (தரு) விருகூலும், என்றெல்லாம் சிறப்பித்து ஒதப்படும் - (அல்லது முத்தும், நவரத்ன மணிக்ளும் வரிசையாய் நிறைந்துள்ள (சத்தி) கிரியாசக்தியாம் தேவசேனை இடதுபாகத்தில் விளங்க நின்றமலையே முத்திக் கனியைத் தரும் கற்பக விருகூடிமே என்று ஒதிப்பணிந்த). முக்கன் மூர்த்திக்கும் அருள் பாலித்து உபதேசித்த முருகக் கடவுளே முப்பத்து மூன்று வகையான தேவர்களாலும் திருவடி விரும்பிப் போற்றப் படுபவனே!(அல்லது முப்பத்து மூன்று வகைத் தேவர்களும் தமது திருவடியைப் பேணி - பேண போற்றி விரும்ப) (ராவணனுடைய)பத்துத் தலைகளும் சிதறுன்ைனும்படி தமதிடமிருந்த அம்பைச் செலுத்தின அரி (திருமால் அல்லது பகைவன்), அருச்சுனன் ஜெயம் பெறும் வகையில் அவனது தேரைச் செலுத்தின. பச்சைநிறம் கொண்ட மேகநிறப் பெருமான் - ஆகிய திருமால் (சூரன் - அவன் தம்பியர் சிங்கமுகன், தாரகன் இவர்களிடத்தில்) வைத்திருந்த பயத்தை நீங்கவைத்த - நீக்கின (பொருள்) கடவுளே! பக்தர்கள் மனத்தில் பொருந்தி விளங்கும் சிவமே அருள்வாயே! (அல்லது) (சிவம்) மங்களகரத்தை - மங்கலத்தை அருளுவாயே! தித்திமிதி தித்திமிதி திக்குகுகு திக்குகுகு தெய்த்ததென தெய்த்ததென தெனனான திக்குவென - திக்கு என்று மத்தளம், (இடக்கை) இடது கையால் அடிக்கப்படும் ஒரு தோற்கருவி, (துடி) உடுக்கை இவையெலாம் தத்தகுகு செச்சரிகை செச்சரிகை என்று ஒலிக்க நடனமாடும் பெரியோன் சிவனுடன் அவரது நடனத்துக்கு ஒத்ததான (நடநி) நடனத்தைப் புரிபவள், (த்ரிபுவனத்தி) மூன்று லோகங்களையும் ஈன்றவள் (மூன்று லோகங்களுக்கும் முதல்வி), (நவசித்தி) புதுமையான - அற்புதகரமான சித்திகளை வரப் ப்ரசாதங்களை அருள்பவள் ஆகிய (சத்தி) தேவி ஈன்றருளிய குழந்தையே!