பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1380

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலஞ்சி திருப்புகழ் உரை 821 பெருமை வாய்ந்த வேதங்கள் ஒலிக்கின்ற (வேத ஒலி முழங்கும் பூ புருட மங்கை என்னும் மகா நகரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! (சேர் கதியதின்றி உழல்வேனோ) இலஞ்சி 975. திருக்கரம் - (கமலம்) தாமரைக்கு நிகராகும்; மின் அதரம் - ஒளி பொருந்திய வாயிதழ் பவளத்துக்கு ஒப்பாகும்; வளை சங்குக்கு ஒப்பாகும் (களம்) கழுத்து; பகழி-அம்புக்கு ஒப்பாகும் கண், மொழி - சர்க்கரை, கரும்பு, அமுது (இவைகளுக்கு ஒப்பாகும்); கொங்கை தென்னங்குரும்பைக்கு ஒப்பாகும்; குருகு) இளமை (பகரும்) ளங்கும் (பிடி) பெண் யானையின் நடைக்கு (அல்லது) (குருகு) பறவைகளில் அன்னம், (பகரும்) சொல்லப்படும் (பிடி) பெண்யானை - இவைகளின் நடைக்கு) நிகராகும் நடை: (இத்தகைய) வேடர்மாது - வள்ளியின் 1 திருமாலை லிங்கமாக்கினது: "குருவா யகத்தியர் உன்னைப் பணிந்திடக் கூடும் வைணவர் நாணவே குளிர்சித்தி ராநதிக் குற்றால மாகுதிரி கூடாசலப்பதிக்குள் மருவார் துழாய் மெளலி யுஞ்சங்கு சக்கரமும் மணிவண்ண முங்காணவே வளர்நெடிய மால்வடிவு குறுகு குறு கென்றே மகாலிங்க வடிவ மாக்கிப் பெருவான மதிநதி முடிக்குஞ் சடாடவிப் பெம்மானை யம்மானிடம் பிரியாத எந்தைதனை யைந்தான னத்தனைப் பெருமானை அர்ச்சியென்றே திருவாய் மலர்ந்தருள்செய் தென்னிலஞ் சிக்குமர! செங்கிரை யாடி யருளே சிறியனேன் அறிவினுட் குடிகொண்ட தெய்வமே! செங்கீரை யாடி யருளே. (கூேடித்திரக் கோவைப் பிள்ளைத் தமிழ்) # குருகு குருத்து, இளமை (சூடாமணி) சிங்கக் குருகு' - சிங்கக்குட்டி