பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1384

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலஞ்சி திருப்புகழ் உரை 825 கொங்கைகள் மார்பில் துவள, (வாளி) அம்பு போன்றதும், (கயல்கண்) கயல்மீன் போன்றதுமான கண்ணும் மேனியும் சிவக்கக் கொவ்வைப்பழம் போலிருந்து கொஞ்சும் வாயிதழ் இனிப்பு ஊறலைக் கொடுக்கக், காம இச்சைக் கடலிடையே. சந்த்ரஹாரம் எனப்பட்ட பொன்மாலை அலைந்து குலையை, நூல் போன்ற பாகமான இடையில் ஆடை குலைந்து துவட்சியுற, நேசம்) அன்பு (தந்திட) தரும்படி, (மாலு) மால் - காம இச்சை, (ததும்பியும்). பொங்கி எழுந்து (அந்த இச்சையில் நான்) முழுகுகின்ற சமயத்தில், உன்னுடைய நிலவொளி மேனியையும், திருமுகங்களையும். நீல மயில் மேல் ஏறி அமர்ந்திடும் திருவடியில் உள்ளதும் (சந்திர) நிலவொளியையும் (அல்லது சம் திர - சுகத்தைச் செய்கின்ற திரமான) (வாகு) அழகையும் கொண்டதுமான (சதங்கை) கிங்கிணியையும் (நான் காணும்படி) சற்று அருள்வாயே. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருப்பாட்டில் மகிழ்ந்து தமது இரண்டு திருவடிகள் கொண்டே (கால்நடையாய்) நல்ல துாது நடந்தவருடைய (சிவனுடைய) ஆகத் தொந்தமொடாடி தேகத்திற் சேர்ந்தவளாய் நடனமாடி யிருந்தவள், ஞானவல்லியாம் சிவகாமியம்மை. அடியார்களுடைய உடலிடத்தே இடங்கொண்டு அமர்ந்தவள், நீலநிறச் சங்கரி, (மோக செளந்தரி) மோக அழகி, அழகிய சுந்தரி, காளி, பெற்றெடுத்த யானைக்கு கணபதிக்கு இளையவனே! இந்திரர்கள், பிரமர்கள் இவர்கள் அடைந்த பயம் நீங்கச், சூரன் அழிந்தடங்க, வேலைச் செலுத்தி, நல்ல மயில்மேல் இன்பகரமாக வீற்றிருக்கும் - வேதப் பொருளானவனே!