பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலஞ்சி திருப்புகழ் உரை 827 மதிக்கத்தக்க தினைப் புனத்தில் மேவியிருந்தவள், (மோகப்பெண்) (உனக்கு மோகம் தந்த நங்கை, (திருவாள்) லக்ஷ்மீகரம் நிறைந்தவள் ஆகிய வள்ளியைத் திருமணஞ் செய்த (இயல் ஆர்) தகுதி நிறைந்த (சொற்கு) புகழுக்கு (அல்லது - இயலார் . இயற்றமிழ்ப் புலவர்களின் சொல்லுக்கு உரிய பெ ! (இஞ் அளாவும்) மதில்கள் ஓங்கி உயர்ந்துள்ள இலஞ்சித் தலத்தில் வீற்றிருக்கும் விசாகப் பெருமாளே (அல்லது - இயற்றமிழ்ப் புலவர்களின் சொற்கு - சொல்லின் பெருக்கம் போல உயர்ந்து பெருகியுள்ள மதில்கள் உயர்ந்துள்ள இலஞ்சியில் விசாகப் பெருமாளேl) (சதங்கையுமோ சற்றருள்வாயே) 977. (அணிந்துள்ள மலரின்மேல் வண்டுகள் உள்ள கருமேகம் போன்ற நீண்ட கூந்தலைப் பார்த்தும், செலுத்தி வீசப்பட்ட வேல் போன்ற கண்ணைப் (பார்த்தும்). (என்) மனம் சுழற்சியடைந்து கலங்கிக் கலங்கித் துடித்துத் துடித்து (வருந்தி வருந்தி) (சுருண்டு) சோர்வுற்று, மயக்கம் உற்று, மாதர்களின் தோளை. விரும்பி, அளவு கடந்து நடந்து, மெலிந்தும், தளர்ந்தும் (நான்) இறந்து போகாமல் விளங்குகின்ற உனது கடப்ப மாலையை விரும்பி அழகிய தனன்டையையும் ப)ெ இன்னிசை ്ബുബ്ബ് ஒலிக்கும் கிண்கிணியையும் அணிந்த திருவடியைத் தந்தருளுக நன்றாய்ப் பொருந்தி அமைந்து (உசிதம் பெற) மேன்மை பெற நின்ற பொன்கிரியாம் கிரவுஞ்சத்தை எறிவோனே - அழித்தவனே! (அல்லது பொன் மலையாம் மேருவைச் செண்டால் அடித்தவனே): (உன்னைப்) புகழ்ந்தும் உனது ஆற்றலைக் கண்டு மகிழ்ந்தும் (உன்னை) வணங்கியும் வழிபட்ட குணத்தைக் கொண்ட இந்திரனுடைய மகள் (வஞ்சிக் கொடிபோன்ற நங்கை) தேவசேனையின் மணவாளனே! பெரிய (தினைப்) புனம் காத்த மங்கை (வள்ளியின்) நிரம்பப் புளகாங்கிதம் கொண்ட (தென்னங்குரும்பை போன்ற) கொங்கையை அணைந்து கலந்த அழகிய மார்பனே! (இலஞ்சியில்) குளத்தில், வந்த காரணத்தால் (இலஞ்சியம்) குளத்தில் உற்பவித்தவன் - குளவன் - என்று திருப்பெயர் கொண்டு இலஞ்சி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெரும்ாளே! (சதங்கை அடிதாராப்)