பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

828 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 978. (அகப்பொருள்) தான தனந்த தான தனந்த

  • தான தனந்த தனதான *மாலையில் வந்து மாலை வழங்கு

fமாலை யநங்கன் மலராலும் வாடை யெழுந்து வாடை செறிந்து வாடை யெறிந்த அனலாலுங், கோல மழிந்து சால மெலிந்து கோமள வஞ்சி தளராமுன். கூடிய கொங்கை நீடிய அன்பு கூரவு மின்று வரவேணும்: # கால னடுங்க வேலது கொண்டு கானில் நடந்த முருகோனே. xகான மடந்தை நாண மொழிந்து காத லிரங்கு குமரேசா; சோலை வளைந்து சாலி வளைந்து ஆழு மிலஞ்சி மகிழ்வோனே. * மாலையில் வந்து "காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலருமிந் நோய்" - திருக்குறள் 1227. f மாலை அனங்கன் - மன்மதனுக்கு மாலை மகிழம்பூ மாலை - பாடல் 952-பக்கம் 765 கீழ்க்குறிப்பு. மாலை - சமயம் - எனவும் பொருள் செய்யலாம் 'வஞ்சமென் றுணர்ந்த மாலை வாய்" -(கம்ப ராமா. திரு அவ-51) # மாணவேல் முட்டை" யாக முருகவேள் கானகத்தே பொய்யா மொழிப் புலவரை வழி மறித்த வரலாறு. - பாடல் 422 அடி 6 பக்கம் 562 கீழ்க்குறிப்பு-பார்க்க x"வள்ளி நானும்படியாக (மொழிந்தது) . பேசினது: "வள்ளி நீ திணைப்புனம் காத்திடல் இழிவான தொழில்: என்னுடன் வருவாயாக விண்ணுலகத்து நங்கையர் யாவரும் உன்னை வணங்கும்படியான வாழ்வைத் தருவேன்" என்று பல உபசார மொழிகளை முருகவேள் கூறினபோது இவர் கூறுவது நன்றாயிருக்கின்றது என எண்ணி நாணத்துடன் வள்ளி. (தொடர்ச்சி 829 ஆம் பக்கம் பார்க்க)