பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1396

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குற்றாலம்) திருப்புகழ் உரை 837 981. முத்தாலாகிய ஒலைதனை (முத்துக் கம்மலைக்) கிழித்து தாக்கி, அயிலை - வ்ேலாயுதத்துடன், போர் - போரில், இகலி மாறுபட்டுப் பகைத்து, சிவந்தநிறம் கொண்டு, முகமாகிய தாமரை மலரில், (செருக்கிடும்) கர்வித்து நிற்கும் - அகந்தை கொண்டிருக்கும் கண்களை உடைய மாதர்களின். முற்றாமல், நெகிழ்ச்சி உடையதாய்ப், பெருத்துள்ளதாய், அழகிய (அல்லது அணிந்துள்ள) ரவிக்கை மேலுள்ள ஆரம் - மாலையை, அற்றுப் போம்படிச் செய்த (நித்தில முத்தாரம்) நல்ல முத்துமாலை கொண்டதும், அழுத்துவதால் உண்டான நகக் குறியைக் கொண்டதும். விஸ்த்தார கவிகளைப்பாட வல்ல திறமை வாய்ந்த புலவர்களின் (பட்டோலை) ஒலைப் புத்தகத்துக்கு (நிகர்த்து இணைத்து) ஒப்பாய் இணையுற்றதாய் எழுந்துள்ள மலை போன்ற கொங்கைகளில் தினந்தோறும் அலைச்சல் உறுவேனோ! உண்மைத் தேவர்கள் போற்ற அவர்களுக்கு உதவும் (உனது) அழகு நிறைந்த தாமரையன்ன திருவடியை (மெய்ப்பு ஆக) உண்மைப் பத்தியுடனே (அல்லது புகழ்ந்து) நான் (வழுத்திட) போற்ற நீ கிருபை புரிந்து அருளுவாயாக; பத்து முடிகளைக் (கிரீடங்களைக்) கொண்ட தலையாம் மலைகள் அறுபட்டு அசைந்துவிழ, அரக்கர்களுக்குத் தலைவனான ராவணன் போரில் அழிந்து உயிர் விடும்படி வெற்றி கொண்டவனான (பூரீராமன்) ருமாலின் மருமகனே! பாட்டு - பக்கம் 698 கீழ்க்குறிப்பு), கொங்கையின் பெருக்கத்தைக் கல்லாடனார் "திருவடி புகழுநர் செல்வம் போலும் அண்ணாந்தெடுத்த அணியுறு வனமுலை" (கல்லாடம் 41) எனக் காட்டிய உவமையிலும், கம்பர் - கோதாவிரி bறைச் சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரி" (கம்ப ராமா - சூர்ப்ப-1) என அருமையாக உவமித்துள்ள இடத்தும் காணலாகும். 1 தேவர்களை - மெய்த்தேவர் - என்பது. பற்றறநான் பற்றிநின்ற மெய்த்தேவர் தேவர்க்கே சென்றுாதாய் கோத்தும்பி" - திருவாசகம் - கோத்தும்பி 5. # ராவணன் தலை - மலைக்கு ஒப்பிட்டது - பாடல் 278-பக்கம் 190 கீழ்க்குறிப்பு : பார்க்க