பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1398

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

839 திருப்புகழ் உரை لولقبة نقوي பத்ம பீடத்திலிருக்கும் பிரமனுடைய அதிகமாயிருந்த ஐந்தாவதான தலையை அறுத்துச் சூரியனைக் கோபித்து அவனுடைய பற்கள் உதிரும்படி உடைத்தெறிந்த (தற்பரன்) பரம்பொருளாம் சிவபிரான் மகிழ்ச்சி கொள்ளும் பெருமானே! கொத்தாயுள்ள (கதலிப் பழக்குலை) வாழைப் பழக்குலைகளும், விரிந்துள்ள பலாப் பழங்களின் சுளைகளும், கொத்தாக (அப்படியே) உதிரும்படிக் குதித் துத் தாவுகின்ற *கயல்மீன்கள் -(ஆரம்) முத்துக்களைக் (கொட்டா) கொட்டி நீர்ச்சுழிகளில் தெள்ளி ஒதுக்கி வீசும் சிற்றாற்றினில் மகிழ்கின்ற திருக் குற்றாலத்துச் சிவபிரான் அருகே வீற்றிருந்தருளும் பெருமாளே! (பதத்தினை வழுத்திடக் கிருபை புரிவாயே) ஆப்க்குடி 982. வாள் வீச்சு படுவதால் சேனைகள் அழியும்படி (ஒட்டி ஒட்டாரை) (ஒட்டாரை) பகைவர்களை ஒட்டி வெருட்டி, றுமாப்ப :ు கொண்ட (தாள்) முயற்சியை உடைய அரசர்களின் பெரிய வாழ்வும். ஒரு நொடிப் பொழுதில் சுடுகாட்டில் (அழிந்து) போகும் என (உணர்ந்து), இல்லற வாழ்க்கையை (விட்டுத்) துறந்து (ஏறும்) கரையேறும் அடியார்களைப் போலக். (கோள்பட) ஒரு கோட்பாட்டை - ஒரு துணிவான முடிவை மேற்கொள்ளவும் (அல்லது கிரக சேஷ்டை அழியவும்) (உனது) திருவடி மலரைக் கண்டு (இளைப்பாறவும்). 4 வினையினால் (கோத்த) ஏற்படுகின்ற தேகம் என்னும் கோலத்துடன் - பல உருவங்களாம்.

கயல் புனலிற் குதித்தெழுதல்: வளிகொள் செங்கயல் பாய்புனல்,2-1-9, செங்கயில் - குதி கொளும் 2.92.10. 1 அரசன் வாழ்வும் அழிபடுதல் - பாடல் 778 பார்க்க

  1. வினைப்போக மேயொரு தேகங்கண் டாய்வினை தானொழிந்தால் தினைப்போ தளவுநில் லாதுகண் டாப் பட்டினத்தார் பொது,