பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவானைக்கா) திருப்புகழ் உரை 133 499. விஷத்தைக் கொண்ட கண்ணினர், சித்தசன் (மன்மதனுடைய) கமக் கலை (சாஸ்திர நூல்களைப்) படித்துள்ள சாமர்த்திய சாலிகள், எப்படிப் பட்டவருடைய மன்த்தையும் வஞ்சனை வழியால் (வஞ்சனை செய்து) தம் வசம் இழுப்பவர் ఫ్గనీ ன்று- - முத்துமாலை அணிந்த வட்ட வடிவுள்ள கொங்கைக்கு விலையாகப் பணம் ஆயிரக்கலங் கணக்காகத் துணிந்து அளந்து கொடுத்தாலும், தங்களுடைய ஆசையைக் கொடுத்த அந்த பொருளுக்குத் தக்கவாறே (அந்தப் பொருளின் அளவே), நடித்து ஒழுகுவோருடன் நான் ஆசை பூண்டவனாய். (அதன்) பின்னர் இளைப்பும் (வாட்டமும்), முசிப்பும் (மெலிவும்), அவத்தையும் (வேதனையும்) அடைந்து உண்டான குலைப்போடு (நடுக்க வாதத்துடன்) பித்தமும் அதிகப்பட தலையில் எழுதியுள்ள விதிப்பிரகாரம்-அவ்விதி காரணமாக பூமியில் அபத்தன் என (பொய்யன் என்று பேர் பெற்று) பல கவுடங்கள் பட்டு, புழுசேர்ந்த மலக்குகையாம் வீட்டைக்கட்டி, (புழுவும் மல்மும் கொண்ட இந்த உடலைப்-பிறவியை எடுத்து) இருக்கின்ற எனக்கு உனது திருவருளைத் தந்தருளுக. தோகை நிரம்ப உள்ள மயிலாம் குதிரையில் ஏறி(அசுரர்கள் யாவரையும்) ஒருசேர வளைத்து, அவர்களைக் கூறுபடுத்தி, அவர்கள் உடல்கள் கிழிவுபட்ட போர்க்களத்தில் இறவாது எஞ்சி நின்ற பெரிய அரக்கர்கள் எதிர்த்து வந்தவர் அத்தனை பேரையும் கடுமையான போரில் (களப்பலி) கொடுத்துப் போரில் மடிவித்துக் (கொன்று) பெரிய பேய்கள் கைகொட்டி நடிக்கவும், கரிய கழுகுகள் உடன் ஆடவும். ஏலம் (வாசனைப்பண்டம்) மணக்கும் தோளில் அணைத்துவைத்துள வேலாயுதத்தை (எடுத்துச் செலுத்திய) சாமர்த்தியத்தை (திறமையை)ப் புகழ்வோர் யாவருக்கும் அவரவர் மனத்தில் நினைக்கும் இச்சைகளைப் பூர்த்திசெய்து அருள்பவனே! களப்பலி - யுத்தகளத்தில் கொற்றவைக்குக் கொடுக்கும் பலி