பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாடானை) திருப்புகழ் உரை 849 திருவாடனை 985. (ஊன்) மாமிசமும், (ஆரும் உள் பிணியும்) நிறைந்து உள்ளே இருக்கும் நோய்களும், (ஆனா)நீங்காது (கவித்த) வளைய மூடப்பட்ட (இந்த உடல் (ஊதாரிபட்டு) கேடுற்று (ஒழிய) நீங்கும்படி - அழியும்படி உயிர் போய் விட்டால் ஊரார்கள் கும்புகூடிவர, ஐயோ என்று கூறி அவர்கள் அணுகி, (ஒய்விலாத கூச்சல் உண்டாகும்படி அழுது, பின்னர் (ஓய) அழுகை அடங்கப பலவிதமான பல்லக்கின்மேலே (பிணத்தைக் கிடத்தி, அது (நாறாது) துர்நாற்றம் வீசுமுன் (அல்லது தெரியாதபடி (உடலை மூடி எடுத்துக் கொண்டுபோய்) (அடவி) சுடுகாட்டில் எரியின் மத்தியிலே கூசாமல் வைத்து விட்டுவிட (அவ் வுடல்) சாம்பலாகும் என்ற விதியுள்ள இந்தப் றவியை (நான் விரும்பாதபடி எனக்கு உன் திருவருளைத் தருக (மால் நாகம்) காளிங்கன் என்னும் பெரிய பாம்பின் (துத்தி) புள்ளிகள் உள்ள படத்தின் மேலே நடனம் செய்த திருமாலும், தேன் ஒழுகும் (தாமரை) மலர்மேல். வாழ்வு கொண்டிருக்கும் ஒப்பற்ற பிரமனும், எட்டுத் திசைகளில் உள்ளவர்களும், தேவர்களும், சிறந்த எட்டு மலைகள் (அஷ்டகிரிகளில்) உள்ளவர்களும் (ஆனா அரக்கருடன்) (கடல் கடைந்தபோது அங்கு) நீங்காது நின்ற அசுரர்களுடன் வானகத்துள்ள கணங்கள் பிழைக்கும்படி - எழுந்த,ஆலகாலவிஷம் (முற்ற) அத்தனையும் (அல்லது உற்றதமக்குக் கிடைத்த) அமுதமாக உண்ட சிவபிரான் முன்பு.

  • ஆசாரத்துடனும் பக்தியுடனும் (கேட்க அவருக்கு) (அல்லது சிவபிரானது முன்னிலையில் t சாத்திர முறைப்படி) ஞான ஆகமப்பொருளை - வேதாகமங்களின் ஞானப் பொருளை (அருள்) - உபதேசித்த பெருமாளே திருஆடானை என்னும் தலத்தில் நாள்தோறும் வீற்றிருக்கும் பெருமாளே! (எனக்கு உன் அருள்புரிவாயே)

書 பால் 982-பக்கம் 840 கீழ்க்குறிப்பு: 1 அப்பொருள் பொழுதிட மறிந் தியல்புளித் தந்திடத் தக்கது - தணிகைப்புரா - வீராட்ட 111.மூலத் தொல்பொருள் யாருங் கேட்ப இற்றென இயம்பலாமோ மறையினால் இசைப்பதல்லால் - கந்தபுரா 1-17-38.