பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1410

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உத்தரகோசமங்கை) திருப்புகழ் உரை 851 உத்தரகோச மங்கை 986. 'கற்பக விருகூடிம் போல (அடியார்க்கு) அவர்கள் வேண்டுவதை ஈயும் ஞான மூர்த்தியாம் கடவுளே! முன்பு விண்ணுலகத்தில் வளர்ந்த (புதசேனைக்கு) தேவசேனைக்குத் தலைவ்னாயிருப்பவனே! (அல்லது தேவர்களின் படைத் தலைவனே)! இன்பரசமான (கள்) தேன் சுவை கொண்ட கரும்பு, (பாகு) வெல்லம், அப்பம், (அமுது) உணவு (சோறு), வெள்ளைச் சர்க்கரை, பால், தேன். (கட்டு)நிரம்ப இளநீர்-அல்லது (கட்டி - இளநீர் கல்கண்டு இளநீர்), (முக்கனி) வாழை, மா, பலா என்னும் முப்பழம், பயறு ஆகிய இவைகளை அழகிய பொலிவுள்ள வயிற்றில் ஏற்றுக்கொண்டருளம் யானையாகிய கணபதியின் (கட்டிளையாய்) வலிமை நிறைந்த இளைஞனே! உன் திருவடியை வணங்கி வேண்டி உனக்கு வாகனமான் அழகிய மயிலையுடையவனே திரளாக உள்ளதும், உருட்சியுள்ளதுமான ரத்நம் பதித்த தண்டையையும், அழகும், ஒழுங்கும் உள்ளதாய் ஒலிக்கின்றதான சிலம்பையும் அணிந்தவனே! என்றெல்லாம் அழகாக உன்னைத் துதித்து மனங்கசிந்து தியானித்து நன்றாக நான் உனது அழகிய திருப்புகழைப் பாடிச், சிவநிலையையும் பெற்று மெய்ஞ்ஞானப் பெருவெளியாம் (சிதாகாச) உயர் நிலையைப் பெற்று, (அப்போது உண்டாவதாகச்) சொல்லப்படுகின்ற உடலில் ஊறும் ஞான அமுதை உண்ணப் பெறுவேனோ! (850 ஆம் பக்கத் தொடர்ச்சி) எமக்குப் பெறுமெனக் குமரவேள் உரைக்கும்." "நீவிர்தாம் இருவிர் ஒரு வடிவாகி நிருதளிற் சூரபத்மா என் றோவிலா விறல் கூர் பெயர் தரித் திமையோர்க் குறுபகையா யுடற்றிடுநாள், தாவில்சீர் எமதாணையால். பசுஞ்சிறகர் மாயூரம் சேவலாம் வடிவுண்டாம் என..... உரைத்தனுப் பினனால்" -உபதேச காண்டம் (ஞான வரோதயர்) 83, 84 X அமுதம் - சிவ அமுது பாடல்கள் 563, 593-அடி 1-பார்க்க