பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1415

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

856 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • ஒலமிடு தாடகைக வாகுவள ரேழுமரம்

வாலியொடு நீலியக னோடொருவி ராதனெழு மோதகட லோடுவிறல் ராவணகு ழாமமரில் பொடியாக

  • (1) தாடகை சுவாகு வதம் - பாடல் 431-பக்கம் 582 கி. ழ்க்குறிப்பு: பாடல் 508-பக்கம் 158-கீழ்க்குறிப்பு.

தாடகை ஓலமிட்டு ஆர்ப்பளித்துச் சப்தத்துடன் வந்தாள். "வானோர் இடங்களும் நெடுந்திசையும் ஏழுலகு மெங்கும் அடங்கலு நடுங்க வுருமஞ்ச நனியார்த்தாள்" - ஆர்த்துவந்த அரக்கியை நீ கொல்லுக அது அறச்செயலே என் விசுவாமித்திரர் கூற இராமபிரான்.தமது பாணத்தால் கொன்றனர்: பாணம்பட்டு அவள் விழுந்ததை. "கடையுகத் தெழுந்த மேகம் மின்னொடும் அசனியோடும் வீழ்வதே போல வீழ்ந்தாள்" - என்றார் கம்பர். -கம்ப ராமா-தாடகை வதை 50, 74. (2) ஏழுமரம் - மராமாங்களை அ ராமர் அட்டது: - பாடல் 231-பக்கம் 78 கீழ்க்குறிப்பு. (3) வாலிவதம் - பாடல் 231-பக்கம் 78, பாடல் 287-பக்கம் 214 கீழ்க் குறிப்பு: பாடல் 631-பக்கம் 470 கீழ்க்குறிப்ாகளப்பு. (4) நீலி - நீலி - என்பது கறுத்த நிறம் கொண்ட அரக்கி - சூர்ப்பனகை, அல்லது அயோமுகி என்பவளைக் குறிக்கின்றது போலும், தாடகையை " நீல அரக்கி" என்றார் 84ஆம் பாடலில் அல்லின் மாரி யனைய நிறத்தவள்" - என்றார் கம்பர் - கம்பராமா-தாடகை 71. (1) ராவணன் தங்கை சூர்ப்பணகை ராம லக்ஷ்மணர்களைக் கண்டு காதல் கொண்டு. தன்னை மணஞ் செய்யுமாறு வேண்ட அவர்கள் மறுத்தமையால் சீதையை எடுத்துச் செல்ல அவள் தொடங்குகையில் இலக்குமணர் அவளது மூக்கு முலை, காதுகளை அறுத்துத் துரத்தினார். (2) அயோமுகி என்னும் அரக்கி இலக்குமணரைக் கண்டு மோகம் கொண்டு தன்னை அணையும்படி வேண்ட இலக்குமணர் மறுக்க, அவரை மோகன மந்திரத்தால் மயக்கி எடுத்துக் கொண்டு செல்ல, மயக்கம் தெளிந்தவுடன் லகrமணர் அவளுடைய மூக்கைத் துணித்து மீண்டனர். (5) பகன் - கண்ணனைக்கொல்லக் கம்சனால் அனுப்பப்பட்ட (பகம்) கொக்கு உருக்கொண்ட அசுரன், கண்ணபிரானால் வாய் பிளவுண்டு இறந்தான். யமுனைக் கரையில் பகாசுரன் கண்ணனை விழுங்க, அவன் (தொடர்ச்சி 857 ஆம் பக்கம் பார்க்க)