பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமேசுரம்) திருப்புகழ் உரை 857 கூச்சலிட்டு வந்த தாடகை, சுவாகு, வளர்ந்திருந்த மராமரங்கள் ஏழு வாலி, நீலி, பகன், ஒப்பற்ற விராதன், எழுந்து அலைகள் வீசும் கடல், வலிமை மிக்க ராவணன் அவனைச் சேர்ந்த அரக்கர் கூட்டங்கள் யாவரும் போரிற் பொடிபட்டழிய (856 ஆம் பக்கத் தொடர்ச்சி) நெஞ்சில் கண்ணன் நெருப்புப்போல எரிக்க, அவன் கண்ணனை உமிழ்ந்து மூக்கால் குத்த நினைக்கையில். அந்தக் கொக்கின்வாய் அலகுகளை இரு கைகளாலும் பற்றிக் கண்ணன் அப் புள்ளைக் கிழித்தெறிந்தான். "பள்ளத்தில் மேயும் பறவை யுருக்கொண்டு கள்ள அசுரன் வருவானைத் தான்கண்டு புள்ளிது என்று பொதுக்கோ வாய்கிண்டிட்ட பிள்ளை" - பெரியாழ்வர் 2.5-4. கும்பகர்ணனைக் - கும்பாகன் (பாடல் 374), கும்பன் (பாடல் 839), கும்பகன் (பாடல் 965) என்றார்; அவனையே இங்கு பன் என்றார் எனவும் கொள்ளலாம். திருமாலின் பல அவதாரச் செயல்களை ஒன்று சேர்த்துங் கூறுவர் அருணகிரியார் - பாடல் 775 பார்க்க (6) விராதன் . இவன் வீணை வாசிக்கும் தும்புரு என்னும் கந்தருவன், ரம்பையுடன் காம விகாரத்தால் ஊடல் கொள்ள குபேரன் இவனை அரக்கனாம்படிச் சபித்தனன். இராமபிரான் காட்டில் வாசஞ் செய்தபோது சீதையை இந்த அரக்கன் துாக்கிச்செல்ல இராம இலக்குமணரால் கையறுப்புண்டு ராமர் தாள்பட்ட பாக்கியத்தால் சுவர்க்கம் அடைந்தான். 'விராத னெனுமக், கோர வெங்கணுரு மேறன. கொடுந் தொழிலினான்.மலரன்னம் அனையாளை ஒருகைச் சொல்லும் எல்லையில் முகந்து உயர் விசும்பு தொடர" சேவடியினால் அமலன் உந்துதலுமே சாபம் விட்டு விளங்கினன். "கரக்கவந்த காமநோய், துரக்க வந்த தோமினால், இரக்கமின்றி யேவினான், அரக்க மைந்தனாயினேன்" "வேதநூல், பூண்டநின் பொலங்கொள் தாள், திண்டலின்று தேரினேன்" -கம்பராமா. விராதன்வதை 19, 20, 45, 16. 66, 70, ++ (7) கடலை அட்டது. பாடல் 177-பக்கம் 412 கிழ்க்குறிப்பு பாடல் 754-பக்கம் 248 கிழ்க்குறிப்பு.