பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமேசுரம்) திருப்புகழ் உரை 859 களிப்புடன் நெருப்பு விசும் அம்பைச் செலுத்தின, கையை உடையவன்), வலிமை வாய்ந்த வில், சக்கரம், சங்கு இவைகளை ஏந்தின கையை உடையவன், இலக்குமி வாசம் செய்யும் திருமார்பை உடையவன். அரி, (கேசன்) கேசவன், ஆகிய திருமாலின் மருகனே! என்று மறைகள் ஒதிப்புகழும் ராமேசுரத்தில் வீற்றிருக்கும் குமரனே தேவர் பெருமாளே! (நாறி உடல் அழிவேனோ) 988. தேவர் கள் போற்றுகின்ற உன்னுடைய திருவடித் தாமரையாம் மலர்மேலே பணி செய்யும் வகையை உணராமல் (மான் விழியராம்) மாதர்களின் கண்வலையிலே (பட்டு) (துள்ளி) பூந்தாதுகள் நிறைந்த மெத்தையினில் ஊடே - மெத்தைப் படுக்கையிலே - அனைத்துப் பெறும் அந்த (சிற்றின்ப) நிகழ்ச்சியால். தேனோ, கரும்பிலிருந்து வரும் சர்க்கரைக் கட்டியோ, இதற்குச் சமமாவன பின் எவை தானோ - என்று கூறிப் புணர்ச்சி பல கோடிக் கணக்கான - பலவாகத் (திராத) அடங்காத மோகத்தோடு (நாகபடம் போன்ற) அல்குற் சேற்றில் விளையாடுதலால் அடைந்துள்ள துயரத்தை விலக்க மாட்டேனோ! மேல் நாடாகிய விண்ணுலகத்தையும் (போரில்) வென்று அடைந்து, மேம்பட்ட சூராதிபனாகிய சூரபத்மாவின் எதிரே போரிற் புகுந்து நின்ற இரண்டு திருவடிகளை உடையவனே! மயில் என்கின்ற உக்ரமான வாகனத்தில் ஏறி அமர்ந்து வெற்றி பெற்ற வீரனே! குறச்சிறுமி (வள்ளியின்) மணவாளனே! ஞானபரன் - ஞானப் பரம்பொருளாகிய சிவபிரானுக்கு இனிமையான வேதாகமங்களின் பொருளை - வேதப் பொருளையும் ஆகமப் பொருளையும் - கூசாமல் எடுத்து உபதேசித்த ஒப்பற்ற பெரியோனே! நாராயண மூர்த்திக்கு மருமகனே! (வீறு) சிறப்பு பெற்று விளங்கும் ராமேசுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! (துயர் ஒழியேனோ)