பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/143

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை அரைக்காடை சுற்றார் t தமிழ்க்கூட லிற்போய்

  1. அணற்கே புனற்கேவ ரைந்தஏடிட்

டறத்தா யெனப்பேர் படைத்தாய் புனற்சே லறப்பாய் வயற்கீழ மர்ந்தவேளே: திரைக்கா விரிக்கே கரைக்கா னகத்தே சிவத்யான முற்றோர் X சி லந்திநூல்செய். “அரைக்கு ஆடை சுற்றாதவர்கள். அமணர் (சமணர்) அரையில் ஆடையின்மையால் அம்)மணம் உடை இலார்"."ஆடை ஒழித்தங் கமணே திரிந்துண்பர்". சம்பந்தர்-2-40. 10, 2.72.10. 1 தமிழ்க்கூடல்-485ஆம் பாடல் கீழ்க்குறிப்பைப் பார்க்க 1 அனலில் புனலில் ஏடு இட்டது - பாடல் 181, பக்கம் - 420. குறிப்பைப் பார்க்க xசிலந்தி நூல்செய் திருக் காவணம் திரு ஆணைக்கா - புட்பவந்தன் மாலியவான் என்னும் கணநாதர்கள் சிவபக்தியிற் பொறாமை காரணமாகச் சினங்கொண்டு தம்மைத்தாமே சபித்துச் சிலந்தியும் ஆனையும் ஆயினர். புட்பவந்தன் வெள்ளானை ஆயினன், மாலியவான் சிலந்தியானான். வெள்ளை யானை வெண்ணாவலின் கீழ் இறைவனைக் கண்டு மகிழ்ந்து பூஜை செய்து வந்தது. சிலந்தி அந்த இறைவனைக் கண்டு மகிழ்ந்து தன் வாய் நூலால் கோயில் மண்டபம், கோபுரம் எல்லாம் இறைவனுக்கு அமைத்து வணங்கிற்று. சிலந்தி நூலைக் கண்ட யானை இஃதென்ன அநுசிதம் என நினைத்து சிலந்தி கட்டின கோயிலைச் சிதைத்து அழித்துச் சுத்திசெய்து பூசைசெய்து போயிற்று. கோயில் சிதைத்து போனதைக் கண்ட சிலந்தி வருந்திக் கோபித்து யானை மறுமுறை வந்து பூசித்த போது அதன் துதிக்கையுட் புகுந்து குடைந்தது. நோய் தாங்க முடியாது யானை மாண்டது வெளியில் வர முடியாமல் சிலந்தியும் மாண்டது இறந்த யானை சிவகணநாதன் ஆயிற்று. இறந்த சிலந்தி சோழர் குலத்தில் பிறந்து கோச் செங்கட்சோழன் என்னும் பெயர் பெற்றது உரிய காலத்துக்குப் பின்னே பிறந்த காரணத்தால் செங்கண்" பெற்று கோச் செங்கணான்" ஆயிற்று இந்த கோச் செங்கட் சோழன் அறுபத்து மூன்று நாயன்மார்களின் ஒருவர் ஆயினர். இவர் இறைவனுக்குபழைய வாசனை காரணத்தால்-யானை புகாதவண்ணம் மாடக்கோயில்" பல அமைத்தார். (தொடர்ச்சி பக்கம்-137 பார்க்க)