பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முள்வாய் திருப்புகழ் உரை 875 மேலே - ஆகாயப் பரப்பிலிருந்து யமன் (கரந்து) :ಕ್ಗಳ್ಗಣ್ಣಿ தெரியாமல் மறைவாக, மண்மேல் உள்ள இந்த உடம்பினின்றும் (உயிர்) அடங்கி நீங்கவேண்டிய அந்த மெலிவு நாளைத் தெரிந்துவர, என் உயிர்போவதற்கு முன் பொன்மயமான சதங்கை, தண்டை முந்நூல் (முப்புரி நூல் - பூணுால்), கடம்பு இவைகளை அணிந்து, (பொய்யார்) பொய்யே பேசாத - மெய்ம்மை யாளர்களின் மனங்களில் நீ வாசம் செய்து (அவர்களுக்கு உதவுவது) போல. இந்தப் பொல்லாதவனாகிய நான் வணங்கி உன்னை வேண்.ே சொற்களையும் நீ (பொருட்படுத்தித்) தெரிந்துகொண்டு, (அழுங்கு) மனம் வருந்தும் இந்தப் (புல் நாய் உள்ளும்) இழிந்த நாயர்கிய (அடிய்ேன்) உள்ளத்திலும் (கவின்று) அழகுபெறப் புகுந்தருளுவாயாக பல நாள்களாக வணங்கி வரும் அன்பர்களாகிய (தேவர்கள்) தமது (பொன் நாடு) பொன்னுலகத்தை (உற) மீண்டும் அடைய அங்கை தந்து (அவர்கள் அழகிய கைவசம்) கொடுத்து உதவி செய்த பன்னாகணைந்து - பன்னகம் பாம்பணையில் (அணைந்து ) (படுக்கை கொண்டு), சங்கம் - (பாஞ்ச சன்னியம் என்னும்) சங்கை (உறவாயில் - வாயில் உற) வாயில் வைத்துப் பல நூல்களும் . பல சாத்திரங்களும் இச் சங்கத்தொனியில் முழங்குகின்றது என்னும்படித் தேவர்களும் மயங்கும்படியாக நின்று (பலவித பண்களையும் ஊதின மேக வண்ணனாம் திருமாலின் மருகனே! முன்னாய் மதன் - மதன் முன்னாய் - மன்மதன் முன்னாக ಣ್ಣ தனது (கரும்பு வில்) தனது கரும்புவில்லை நேர்தடம் தரிந்து நேர்ாக (எய்ய வேண்டிய) இடத்தை அறிந்து முன்பாக (ஒர்) ஒரு (பொருங்கை) (பொருகை) போர்செய்யும் தொழிலை மேற்கொண்டதுபோல, (முனையாட) போர்த்தொழிலைப் புரிய - மன்மதன் காலமும் இடமும் அறிந்து தனது போர்த்தொழிலைப் புரிய - அதாவது காம இச்சையை ஊட்ட நெருங்கி ரவிக்கையுள் நிமிர்ந்துள்ள கொங்கையை உடைய உண்மைக் குணம் கொண்ட மாதர்கள் வந்து வணங்குகின்ற முள்வாய் என்னும் தலத்தில் விளக்கமுற நிற்கும் பெருமாளே! (நாய் உள்ளம் கவின்று புகுவாயே)