பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவானைக்கா திருப்புகழ் உரை 137 அரையில் (இடுப்பில்) ஆடை கட்டாதவர்கள் (சமணர்கள்) மிக்கிருந்த தமிழ் வளர்ந்த மதுரைத் தலத்துக்குப் போய் அங்கே நெருப்பிலும், நீரிலும் பாடல் எழுதப்பட்ட ஏட்டினை யிட்டு அறச் செல்வன் என்னும் புகழைக் கொண்டாய்! நீரில் சேல்மீன்கள் நிரம்பப் பாய்கின்ற வயற்கீழ் (வயல்களின் கீழ்புறத்தில்-அல்லது வயலூரில் வீற்றிருக்கும் (செவ்)வேளே! திரைகள் வீசும் காவிரியின் கரையில் இருந்த காட்டினுள்ளே சிவத்யானம் நிறைந்திருந்த சிலந்திப் பூச்சியின் நூலால் அமைக்கப்பெற்ற (136 ஆம் பக்கம் கீழ்க்குறிப்புத் தொடர்ச்சி) எண்டோள் ஈசற்கு எழில்மாடம் எழுபது செய்து உலகம் ஆண்ட திருக்குலத்து வளச் சோழன். - பெரிய திருமொழி -6-6.8 "புத்தியினாற் சிலந்தியுந்தன் வாயின் நூலால் பொதுப் பந்தர் அது இழைத்துச் சருகால் மேய்ந்த சித்தியினால் அரசாண்டு சிறப்புச் செய்யச் சிவகணத்துப் புகப் பெய்தார்: திறலால் மிக்க வித்தகத்தால் வெள்ளானை விள்ளா அன்பு, விரவியாகண்டதற்கு வீடு காட்டிப் பத்தர்களுக் கின்னமுதாம் பாசூர் மேய, பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே" - அப்பர் 6-83-6 "சிலந்தியும் ஆணைக்காவிற் திருநிழற் பந்தர் செய்து உலந்தவண் இறந்த போதே கோச்செங்க ணானு மாகக் கலந்தநீர்க் காவிரிசூழ் சோணாட்டுச் சோழர் தங்கள் குலந்தனிற் பிறப்பித் திட்டார் குறுக்கைவி ரட்ட னாரே - அப்பர்-f-49-சி. யானை பூசித்து அருள் பெற்ற காரணத்தால் 'ஆனைக்கா" என ஆயிற்று. "செறிகவுட் கடாத்த ஆனைக்கு ஆரருள் புரிதலின் ஆனைக்கா ஆயிற்று" திரு ஆணைக்காப் புராணம் மேற்சொன்ன வரலாற்றின் விரிவைத் திருவானைக்காப் புராணம் திரு ஆணைக்கா உலா, பெரியபுராணம் என்னும் நூல்களிற் காண்க