பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விசுவை திருப்புகழ் உரை 881 தேவர்கள் மகிழ்ச்சியுற்றுத் தொழுது வணங்குகின்ற உனது திருவடியிரண்டையும் அன்புடனே (எனக்குத்) தந்தருளுவாயாக; கிரெளஞ்சகிரிமேற் கோபித்து, அது அழிபட்டு விழும்படிக் கண்டித்துக் கூரிய வேலை அதன்மேற் செலுத்தின திறமை வாய்ந்தவனே! இனிமை வாய்ந்த செவ்விய சொற்களை உடைய குறமகளாம் அழகிய வள்ளியின் (நகில்) கொங்கைகள் பூரிக்க அவளிடம் சென்ற வேலனே! நறுமணம் கொண்ட கொன்றை, அறுகு இவைகளைச் சூடியுள்ள இடபவாகனராம் (அரர்) சிவபிரான் அருளிய குழந்தையே! வாசனை கொண்ட சந்தன மரச் சோலைகள் விளங்கும் விசுவை என்னும் தலத்தில் விளங்கி வீற்றிருக்கும் பெருமாளே! (அடியினை அன்பொ டருள்வாயே) -வேலுமயிலுந் துணை