பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/146

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவானைக்கா) திருப்புகழ் உரை 139 அழகிய பந்தலின்கீழ் இருந்தவரும் அருள்மிக்க அழகிய (சாலகத்தே) சிலந்திவலைக்கீழ் விளங்குபவருமான சோதியாம் சிவ பிரானுடைய (பிரானே) தலைவனே! (அல்லது) பந்தலின்கீழ் இருப்பவருடைய திருவருட் பாக்கிய மாய் விளங்கும் தம்பிரானே! அழகிய பலகணி வழியாய்ச் சோதி வடிவாய்த் (தரிசனம்) தருகின்ற தம்பிரானே! (இடர்ப் பாடின் மங்குவேனோ) 501. (மறைகள் ஒலம் அறைகின்ற ஒன்று அது) - வேதங்கள் (எங்குற்றாய் என்று தேடும் அபயக் குறிப்பொலியை எழுப்புகின்ற ஒப்பற்ற ஒரு (பொருள்; பரவெளியில் - பராகாசத்தில் - ஞானாகாசத்தில் - விளங்கும் பரஞ்சோதி, சொல்லப்படும் சரியை, கிரியை என்னும் மார்க்கத்தைக் கைப்பற்றினவர்கள் எவராலும். ஒதுதற்கரிதாய் துரியநிலையை (யோகியர் தம் மயமாய் நிற்கும் உயர் நிலையை)க் கடந்து நிற்பது அறிவு, வடிவமின்மை, வடிவம் உண்மை உலகு உடல், உயிர் இவை எல்லாவற்றிலும் கலந்து நிற்பது சிவஞானம் நிரம்ப உடைய தவத்தினர் கண்டு கொண்ட து: மூலப்பொருளாய் நிறைந்துள்ளதாய்க் குறைவே இல்லாது நிற்பது சாதி, குலம் இவை இல்லாதது மேலும், அன்புள்ள அடியார்கள் சொன்ன வியோமத்தை (ஞானாகாசத்தைச்) சார்ந்துள்ள அநுபவர் (அனுபவங் கொண்டுள்ள பெரியோர்கள்) அமைந்து அமைந்த (மனம் ஒடுங்கிப் பொருந்தியுள்ள உண்மையான மோகூடி வீடாம் ப்ரமசுகக் கடல்போன்றது . இத்துணைப் பெருமைவாய்ந்தது நின்கழல், (இந்திரிய தாப சபலம் அற) - இந்திரியங்கள்ால் ஐம்புலன்களால்) உண்டாகின்ற தாப சபலம் (தாக ஆசைகள், மெலிவுகள்) ஒழிய வந்த அந்த (நின்கழலை)ப் பெறுவ்ேனோ;