பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவனைக்காl திருப்புகழ் உரை 145 503. (காவிப்பூவை) கருங்குவளை மலருடனும், ஏவை (அம்புடனும்) மாறுபடுவன, கரிய ஆலகால விஷத்தை ஒப்பன, கொல்லுந் தகைமையதாய் போகத்தையும் இன்பத்தையும்), மோகத்தையும் (காமமயக்கத்தையும்) (அருள்வன) கொடுப்பன . இரண்டு தோடுகளை அணிந்துள்ள காதுகளை வெட்டுவனபோலப் போய் மோதித்திரியும் (க(ண்)ண) கண்களைக்கொண்டு மாயம் செய்பவர்கள் ஆகிய பொதுமாதர்களின் தேகத்தைத் தொடுதற்குள்ள ஆசை, (குரோதம்) கோபம், (லோபம்) ஈயாமை, (மதம்) செருக்கு இவை அழிவுபடாத பாவிக்கு (பாவியாகிய எனக்கு) - (ஆயு வாயு வலம்வர லாலிப்பார்) - ஆயுளும் பிராணவாயுவும் வலிமை வரும்படி அன்பு வைத்து போஷிப்பவர்களுடைய அறிவொடு கூடிய தொழில்களின் உபாயத்தைக் காட்டும் ஞானவழியை இனிமேல் (என்மீது) அன்பு கூர்ந்து அந்த வழியே குறியாக வைத்துக்கொண்டு, யோகம், ஜெபம், தவம் இவைகளில் அன்பு வரும்படிச் செய்து, பேரொலிசெய்யும் சிலம்பணிந்த (உனது) திருவடியில் (என்னை) ஆண்டுகொண்டு ஆளுமாறு (உனது) திருவுள்ளம் நினைந்தருளாதோ! (கூவிக் கோழி வாழி என) கோழியானது கூவி வாழி' என்று வாழ்த்தி, மயில் (ஆலித்து) ஆரவாரம் செய்து ஆலகால ஷம் போல உயர்ந்து விளங்க, சிவகணங்களாகிய பூதகணச் சேனைகள் வானில் (மகிழ்ச்சியுடன்) விளையாடக்.