பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/154

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவானைக்கா) திருப்புகழ் உரை 147 கோர (அச்சந் தருபவனும்) திரனுமான சூரனுடைய வினை சிந்தி ஒழியவும், (சீறல்) சிறிப் பெருங்கோபத்துடன் வந்த ஆதிவராகம் (கோலாகலமாக)க் கூக்குரலிட்டு அடங்கவும் போர் புரிந்த கூரிய வேலனே! 1 ஆவி (குளத்தில் உள்ள) சேல்மீன்கள் கமுக மரத்தின் மடல்) ஏடுகளாகிய இளம்பாளைகளின் குலைகள் பிளவு. படும்படி (உயர்) உயர்ந்து பாயும் (ஆலை) கரும்புகள் நிறைந்த (அல்லது - கள் நிறைந்த) சோலையைக் கொண்ட மேலைவயலூர் (என்னும் தலத்தில்) வீற்றிருப்பவனே! ஆசை நிரம்பிய (தோகைமார்கள்). பெண்கள் இசை பாடிக்கொண்டு ஆடியும் பாடியும் (நாடியும்) விரும்பியும் வந்து (வணங்குகின்ற) திரு ஆனைக்கா என்னும் தலத்தில் விருப்புடன் வீற்றிருந்தருளும் பெருமாளே! (பாதத் தாளுமாறு திருவுளம் நினையாதோ) 504.

  1. ரத்தம், ஊன், எலும்பு, தோல், நரம்புகள், புழுக்கள், X(மால்) காற்று, (அம்) நீர், (பி.சிதம்) இறைச்சி, இவைகள் நிரம்பிய குடல், கொழுப்பு, மயிர், மூளை என்னப்பட்ட இவை நிறைந்த உடல் என்னும்

1 ஆவி - வாவி - குளம்

  1. குடருங் கொழுவும் குருதியும் என்பும் தொடரு நரம்பொடு தோலும் - இடையிடையே வைத்த தடியும் வழும்புமாம்" நாலடியார்.

Xமலம் - மாலம் என நீண்டது எனவும் கொள்ளலாம்.