பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவானைக்கா) திருப்புகழ் உரை 149 குடிசையுள் நிகரற்ற ஐந்து வேடர்கள் (ஐம்பொறிகள் மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன), ஐம்புலம் (சுவை, ஒளி, ஊறு ஒசை, நாற்றம்) என்னும் காட்டின்டயே ஒடுகின்ற கெட்ட ஆசைகொண்ட வஞ்சகர்கள், பொல்லாதவர்கள், கொடிய பஞ்ச பாதகங்களை (கொலை, பொய், களவு, கள்ளுண், குருநிந்தை எனப்படும்) கொடிய பாவச் செயல்களைச் செய்ய, அதன் விளைவாக வேதம், புராணங்கள், ஆகமங்கள் - சொல்லப்படுகின்ற சரியை, கிரியை, தேவர்பூஜை வழிபாடு, தோத்திரம், இவை கொண்டுநாடிச் செய்யும் தியானம் - இசை ஒன்றையேனும் முயற்சி எடுத்துக்கொண்டு அநுட்டிக்காம்ல் அறிவிலியாய், பயனிலாததும் ஆசைகளை எழுப்புவதும் ஆய கொடிய ஆணவ இருள் கொண்டவர்களுடன் - மந்தர்களுடன் கூட்டுறவாய் வருத்தம் அடைந்த குற்றம் தொலைய (ஆனந்த) பேரின்ப வீட்டை யான் காணும். படியாக அருள்புரிவாயாக. ஒப்பற்ற ஒரு வேலாயுதத்தால் பெரிய கிரவுஞ்ச மலையும், அசுரர்களும், (சூரனாம்) மாமரமும் அலைவீசும் கடலும், உடைபட்டு அழிய மோதின. குமரனே தாமரையன்ன திருக்கரங்களை உடைய வீரனே! உயர்ந்த தவசிகள், சிறந்த மேலுலகத் துள்ள தேவர்கள் - (உனது திருவடியைத் தொழுதே (மன்) நன்றாகப் போற்றிசெய்யும் அடியார்கள். ஆகியோர்தம் உள்ளத்தில நாள் தோறும் விளையாடி மகிழ்ச்சியுட்ன் வீற்றிருப்பவன்ே! ஆய்ந்து அறிந்த ஆறு அங்கங்கள், யாகங்கள் இவைகளில் வல்ல அந்தணர்கள், "ஹரி ஹரி கோவிந்தா: கேசவா" எனக் கூறித் தனது இரண்டு திருவடிகளிலும் தொழுகின்ற சீரங்கராஜனாம் திருமால் அன்பு கொள்ளும் மருமகனே!