பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/158

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவானைக்கா) திருப்புகழ் உரை 151 பிரமனும், இந்திரனாதிய தேவர்களும், எமது தலைவன் என்று திருவடியில் வணங்கப்பெற்ற - திரு ஆனைக்காவில் வாழ்கின்ற ஜம்பு நாதர் ஈன்றருளிய பெருமாளே! (ஆனந்த வீடு கண்டிட அருள்வாயே) 505. விரும்பித் தேடித் தொழுகின்ற (அடியாரிடத்தே) நான் (நத்து ஆக) விருப்பம் உள்ளவனாகத் திரிய மாட்டேனோ! மாட கூடங்கள் உள்ள (கூடற்பதி மதுரைத் தலத்தைக் குறிப்பதான) துவாதசாந்த நிலையிற் கூடும் ஞான வாழ்வினை அடையும்படி அருள்புரிக; 0 பாடலில் ஆசை கொண்டுள்ளவனே! பால் போன்றதும் தேன் போன்றதுமான இனிமை கொண்ட அருளைப் பாலிப்பவனே! (அல்லது பால் போலவும் தேன்போலவும் இன்பம் பூண்டு அருள்வோனே!) "நடனம் ஆடும் மயிலுக்கு இன்பம் பயப்பவனே! (மயிலுக்கு இன்பம் தருபவனே). அல்லது ஆடுமயிலை ஒத்த வள்ளிக்கு இனியவனே! ஆனைக்காவிற் பெருமாளே! (ஞான வாழ்வைச் சேரத் தருவாயே) "துவாதசாந்தப் பெருவெளியில் துளியங்கடந்த பரநாத மூலத் தலம்" மீனாட்சிபிள்ளை - முத்தம் - 1 துவாதசாந்த நிலை பரநாத வெளியில் துவாத சாந்த வீடு' மீனாட்சிபிள்ளை - சப்பாணி - 4 'துவாத சாந்தத் தொரு பெரு வெளிக்கே விழித்துறங்கும் தொண்டர்' மீனாட்சிபிள்ளை - அம்மானை -3 O முருகனுக்குத் தமிழ்ப்) பாடலிற் காதல் தமிழிற் பாடல் கேட்டருள் பெருமாளே." in a - திருப்புகழ் 782 * ஆடும் தோகைக்கு நிகர் வள்ளி - ஆடிய மயிலினை ஒப்புற்று விளையாடும் வேடுவர் சிறுமி திருப்புகழ் 1199