பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/174

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருனைl o திருப் புகழ் உரை ‘. 167 (கற்பக) விருகூடித்தை நீங்கள் ஒப்பீர்கள் எனப்பாடும் கவித்திறமும் போதும் போதும்; நல்ல உருவமும் இளமையும் போதும் போதும்; ஒன்றுக்கொன்று மா றுபடுகின்ற &TLDLL/ சாஸ்திரங்களும் போதும் போதும்; வேதனைப்படுத்தும் அஞ்சுதல் உறுத்தும் வினைக்கு ஈடான வாழ்வும். நீர்மேல் எழுத்துக்கு நேரான பிறப்பும் போதும் போதும்; இனியேனும்), உன் அடியாரோடு நானும் ஒரு வழிப்பட்டு ஈடேற உனது இரண்டு (ஒலிசெயும் சிலம்பணிந்த) திருவடிகளையும் மெளனோபதேசத்தையும் தந்தருளுவாயாக. உருவம் கறுப்பான ஒப்பற்ற அம்பு கரிய திருமால் அம்பாக) சர்ப்பராஜனாம் வாசுகி வில்லின் முனைகளில் முடியப்படும் (கயிறாக), பொன்னுருவ (மேருமலை வில்லாக, சக்கரங்கள் (சூரியன் - சந்திரன் எனப்படும்) சுடர்களாகத் தேர்ப்பாகன் பிரமன் ஆக, வேதக் குதிரைகள்) பூட்டப்பட்டுள்ள திண்ணிய தேவர்களே ரதமாக ஆன (தேர்மேல்) (சிவபிரான்) அடிவைத்தவுடனே நெறு நெறு என்று (அத்தேர்) முறிபடவும், நிலைத்த (அசைவு உறாத) தவ நிலையைக் கொண்டிருந்த (ஒருவரும் இருவரும்) திரிபுராதிகள் மூவரும் (தீயில்மாளாது) (உய்ந்து) அருள் பெறவும், ஒரு கோடிக்கணக்கான தெருக்களும் (திரிபுரத்திலிருந்த வீடுகளும்), ஊர்களும், அசுரர்களின் தலையுடனே சட சட என்று வெடிபட்டும், புகைவிட்டும், திகுதிகென எரிவனவாய், ஆம்படி தி எழுப்பிய சிரிப்பைக்கொண்டு கோபித்த சிவபிரானது. குழந்தையே! வேடர் மகளைக்கண்டு உருக்கம்கொண்ட பெருமை வாய்ந்தவனே! திரு அண்ணாமலையில் ஏழுநிலை விளங்குவதான கோபுரவாயிலில் (அல்லது உயர்ந்த நிலை விளங்கும் மலை உச்சியில்) மயில்மேல் உலவி விளக்கம் தரும் பெருமாளே: (சரணமும் மவுனமும் அருள்வாயே)