பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/182

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை! திருப்புகழ் உரை 175 கடலில் முழுகினும், என்வசம் அழிந்தாலும், முதல் நாள் திருவண்ணாமலைப் பதியில் கருணையுடன் (நீ) அளித்தருளிய மேலான ஒப்பற்ற உபதேச மொழியையும், (உனது) இரண்டு திருவடிகளையும் மறவேன்; விண்ணுலகத்துத் தேவர் தலைவன் (இந்திரன் வழிபட எழுகிரியானது, வட்டமான சக்ரவாளகிரியுடன் மிதிபட வடக்கே உள்ள சிரேஷ்டமான பொன்மயமான பருத்த மேருமலை அடியோடு பொடிபட பழையதான (சூரனாம்) மாமரம் ஒலித்து சுழி யெறியும் கடலிடத்தே கிழிபட்டு அறுபடவும் மிக்க கலகத்தைச் செய்துவந்த அசுரர்கள் பொடிபடவும், நடத்தின தோகை நிரம்பிய பச்சைக் குதிரையாம் மயிலேறும் அரசே! (இமய) மலை மயிலாம் பார்வதியின் செல்வக் குமரனே! நெருப்பை ஏந்திய திருக் கரத்தனாம் சிவனுடைய பிள்ளையே! கணபதிக்குச் சகோதரனே! சரவணனே! நறுமணம் வீசும் நூற்றிதழ்த் தாமரையிற் பள்ளி கொண்டவனே! (காட்டிற் சஞ்சரிப்பவர்களாம்) வேடர்கள் நல்ல கதிபெற (சிவ) முநிவர்பெற்ற (தினைப்) புன மானாம் வள்ளியின் முத்தாலாய மேலணிந்துள்ள ஆடை வளைவுபட நிமிர்ந்து எழுவனவும், இளமை வாய்ந்தனவும், புளகிதம் கொண்டனவும், கஸ்துாரி அணிந்துள்ளனவுமான கொங்கைகளாம் மலையைத் தழுவ மோகங்கொண்டு ஒப்பற்ற மடல் எழுதின பெருமாளே! (ஒரு வசனமும் இரு சரணமும் மறவேனே) 51 4. மேகமும், வலிமை பொருந்தும் முற்றின. இருளுமே கூந்தல் என்றும், பூரண சந்திரனே முகம் என்றும், புருவம் இரண்டும் பகைவர்தம் கட்டப்பட்ட வில் என்றும், விரைந்து பாயும் அம்பு கண் என்றும் . மூப்பிலாத (கேடுறாத)