பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருனைl திருப்புகழ் உரை 177 தாமரையின் அரும்புநிலை மலர் கொங்கை எனவும், பற்களையும் இரு குழைகளையும், மொழியையும், (உவமை) சொல்லுதற்கு அரிதானதாமொரு மாதர்களின் செயலாற்றுங் களெனவும் கூறிப் பகலும் இரவும் மிக்க மன மருட்சியுடன் (பதியிலர்) பொது மகளிரின் வடிவில் -PlէPG, இருப்பிடங் கொண்டிருக்கின்றதெனச் சற்றும் குறைவிலா வகையில் அவர்கள் அன்பு கொள்ளுமாறு இதமொழிகளை (இன்ப வார்த்தைகளை) அவர்களிடம் சொல்லித் திரியாதே. L'ബ്ബLD பூண்டு, எதிர்த்துச் சண்டைசெய்த அசுரர்களைத் துரளாமாறு, அழகுடன் (நடை) கூத்து - நடனம் செய்கின்ற மயில்மேல் வரும் திரு ஒலக்க தரிசனத்தை (உலாவரும் காட்சியை) தினந்தோறும் நினைப்பாயாக என்று வரம் அருளுக (திருவருள் மொழியைக் கூறுவாயாக.) எடுத்துச் சொல்லுதற்கு அரியதான பொருள் இதுதான் என்றும், ஒரு புதிதாம் தன்மையில் கற்பனை செய்ய அரியதான முதன்மையது, ஒப்பற்ற பொதுவாம் தன்மை கொண்டது இது என்றும், தவநிலையில் உள்ள முநிவர்கள் பக்கத்திற் சூழ்ந்து நிற்க திரிபுரம் எரியுண்ண நகை புரிந்தவர், கங்கையையும், வளரும் பிறையையும் அணிந்துள்ள சடையினர் - ஆகிய சிவன் பூமியில் (சுவாமிமலையில் - (அல்ல து) திருத்தணிகையில்リ உன்னை வழிபட்டு நிற்க (அவருக்கு நீ! ரகசியப் பொருளை சாமர்த்தியத்துடன் உபதேசித்தவனே) சகல கலைகளும், தரும நெறியைக்கூறும் ஒழுக்க (நூல்களும்) எல்லாவற்றையும் மொழியவல்ல புலவர்களும், உலகில் உள்ள அறிஞர் யாவரும், த்வ நிலையைச் சார்ந்து முயல்பவர்களும், இயற்றமிழாலும் இசைத் தமிழாலும். (கார்த்திகை மாதர்) அறுவர்களின் முலைப்பால் உண்ணும் அறுமுக (சுவாமி) இவன் என்று தியானித்துக் கூறி அருமையான நடனம் இடும் அடியவராய் (உனது) திருவடியைத் தொழுதுநிற்கத் திருவண்ணாமலைத் தலத்தில் அழகுடன் வீற்றிருக்கும் பெருமாளே! (அதுதினம் நினையென அருள்!ர்புகர்வாயே)