பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/188

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைl திருப்புகழ் உரை 181 ரகூைடி போன்ற அநுமானோடு எழுபது (வெள்ளம்) குரங்குகள் (மலைகளைப்) போட்ட அணையிற் (கடலை) அடக்கிக் கடந்து எதிர்த்துப் போர்செய்த போர்க்களத்தில் ஒரு அம்பை விட்ட பராக்ரமனாம் திருமாலின் மருகனே! போராடின அசுரர்கள் தங்கள் படையுடன் தமது மிக்க வலி எல்லாம் தொலைந்தழிய, நிலைபெற்றிருந்த கிரவுஞ்சத்தை இடித்துத் (தரு மன் அவர்) கற்பக விருகூடித்தின் நீ ல் அமர்ந்துள்ள அந்தத் தேவர்களைத் (தங்கள்) ஊரில் பொன்னுலகில் குடியேறவிட்ட) குடியேறும்படி உதவின. (பதன் - பதம்) அழகு பொருந்திய மயில் வீரனே! xபுதிய மணிகள் பல பல செருகியுள்ள தலையினை உடையவள், ஆடை இடையில் அழகோடு அமைந்த குறமகள் (வள்ளியின்) கொங்கையை அன்புடன் தழுவின பெருமாளே! (மவுன வசனமும் இருபெரு சரணமும் மறவேனே!) 516. oவிஷமும் அமுதமும் இரண்டும் கொண்டு விளங்குகின்ற இரு விழிகளும் குளிர்ந்த) தாமரையல்ல, நெருப்பில் தோய்ந்து அம்புகளாம் என்றும்; நறுமணம் கமழும் கஸ்தூரி வாசனைகொண்ட கூந்தலும் மேகம் அன்று, ஒப்பற்ற ஞான விழி நாடும் வழியை மறைக்கும் இருளைத்தரும் தனி இருளாம் என்றும் பேச்சும் அமுதம் அன்று, உயிரையே கவரும் வலையாம் என்றும்; விரும்பும் காமத்தை ஊட்டும் பற்கள் (தளவன்று களவாம் என்றும்) முல்லையரும்பு அன்று, திருட்டுத்தனத்தைத் தம்மாட்டு ஒளித்து வைத்துள்ளவைகளாம் என்றும்; வியப்பைத் தரும் தொப்புள் (கொப்பூழ்) என்னும் என்றது . ஒருமை பன்மை மயக்கம் துன்புற் றவுணர்கள் நமனுல குறவிடு மயில் வேலா" என்றார் 21 ஆம் திருப்புகழில். X தருணமணி - துகிலிடை'. "து.ாசா மணியும் துகிலும் புனைவாள்" . கந்தர் அ நுபூதி O இந்த அருமைத் திருப்புகழில் முதல் நான்கு அடிகள் விலக்கணியின் பாற்படும். "கடுவும் அமிர்தமும் விரவிய விழியினர்" - என்றார் திருப்புகழ் 60-ல்