பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/192

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருனைl திருப்புகழ் உரை 185 (கடகம்) கங்கணம் அணிந்தனவும், புளகம் கொண்டுள்ளனவுமான புயமலைக் கூட்டத்தை உடைய (விகட அக) அழகு வாய்ந்த உள்ளத்தவனே! கசரத துரக நிசிசரர் கடக பயிரவ (நிசிசரர் - கசரத துரக கடக பயிரவ) அசுரர்களுடைய யானை, தேர், குதிரை, சேனை (இவைகளுக்குப்) பயங்கரத்தை ஊட்டுபவனே! கயிரவ மலர்களும் - செவ்வாம்பல் மலர்களும், எரிகின்ற தீயும் கருகும்படி அவ்வளவு சிவந்த ஒளியை வீசும் தேகத்தை உடைய கடவுளே! கவுதமர் என்னும் பரிசுத்தமான முநிவர்தொழுது பூசிக்கத் திரு அண்ணாமலையில் அறநெறியை வளர்த்த கருணை வடிவினளாம் உமையவள் ஈன்ற சரவணனே! தேவர் தலைவனாம் இந்திரனுக்குப் பெருமாளே! (உணர்வொடு புணர்வதும் ஒரு நாளே) 517. நிறைந்த வண்டுகள் கூந்தலிற் சரிய, புளகிதம் கொண்ட பொன்மயமான கொங்கை மலை அசைய, போரிடுவது போன்ற கண்கள் அம்புகளென (விளங்க), நெற்றி புரள, ஆடையானது நெகிழ்கின்ற மாதர்களின் (கழுத்திற்) கரிய மணி (மாலை) புரள்வதால் அருமையான சோதிஒளி பரவ, இரண்டு குழைகளும் அசைய, ஒளி விளக்கமுள்ள பொன்வளைகள் கல என ஒலிக்க, நடை பயிற்றுபவர் மயில்போல (மயில்போல நடை பயிற்றுபவர்). பூசியுள்ள சாரமான புனுகுசட்டம் ஒழுகத் தெருவில் அலைய, விலைக்கு விற்கப்படும் கொங்கை வெளித்தோன்ற, காமப்பற்றுடன் நெற்றிப்பொட்டு அணிந்துள்ள முக அழகுடன் (அங்குமிங்கும் சுழலுபவர்) திரிபவர்களாம் பொதுமகளிரின்) வாயிதழ் ஊறலைத்