பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருனைl திருப்புகழ் உரை 187 கடலில் எடுத்த அமுதே இது என்றும், கரும்பு இது என்றும், (கள்) தேன் இது என்றும், பலாப்பழத்தின் சுளை இது என்றும், அந்த மாதர்களின் மோகத்தில் தழுவுகின்ற முட்டாளின் (திருகு) குற்றங்கள், (புலை) இழிவான தன்மை, (கலிகள்) துன்பம் தரித்திரம் முதலிய தின்ம்கள் சிதறி விலக அருள்புரிவாயாக குமர குருபர, குமர குருபர, குமர குருபர, குமர குருபர, குமரகுருபர, குமரகுருபர என்னும் ஒலியுடன் தாளங்கள் . ஒலி செய்கின்ற ரசத்துடன் (போர்ப் பறையுடன்), அருமையான வெற்றி கள் டமட டமடம டமட டம என்று அதிரொலி செய்ய, திமிலை (பறைவகை), சல்லரி (பறைவகை), கின்னரி (யா ழ்வகை) முதலானவை பாடத் தேவரும், முநிவரும், பிரமனும், யாவரும் மதுகை மலர்கொடு தொழுது (கை மது மலர்கொடு தொழுது) கரத்திலேந்திய) தேன்நிறைந்த பூக்களைக்கொண்டு தொழுது, (இழந்து நின்ற) தத்தம் பதங்களை பதவியைப் பெறவும், அசுரர்களின் குதிரை, யானை, தேர் இவை உடைபட்டழியவும் செலுத்தின வேலாயுதனே! எல்லா உலகங்களும் எங்கும் ஒளி பெறவும், அழகிய பாதங்களை மயிலின்மேல் இருத்தி ஒப்பற்ற திரு அண்ணா மலையில் மருவிய (வீற்றிருக்கும்) பெருமாளே! குறமகள் வள்ளியைச் சேர்ந்த பெருமாளே! (திருகு புலைகொலை கலிகள் சிதறிட அருள்தாராய்) 518. (கயல்) கண்விழித்தேன் (உங்களுக்குப் பணிவிடைகள்) எத்தனை நாள் கண்விழித்துச் செய்தேன், என்னைச் செயலற்றுப்போம்படிச்செய்து விட்டீர்களே! என்றும், கணவ! இனி நான் அழிந்துபோனேன் என்றும் கூறி மன்ைவி அழப், பெற்ற தாய் - என் எண்ணத்திலேயே உள்ள மகனே என்று புலம்ப, பிள்ளைகள், அப்பா'என்று கதறப் பாடையில் தலைமாட்டுப் பக்கத்தே நின்று