பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

\ Аимыми) A)(I» ، '، ، /* I/11 ;:٬«- س ١)!) பல ஜாதிகளைச் சார்ந்த அறியாமை கொண்ட பெண்கள் தெரிந்துபேசும் வசைப் பேச்சுக்களே மிகுதியாகப் பேசுவதாலும் - முழுமையும் ஈடுபட்டழுந்தியுள்ள என்னுடைய ஆவி சிறிதேனும் அழியாமல் * மகுடம் (உச்சிக்கொண்டையும்), *(மணி) அழகிய வாரும் (கடிவாளவாரும்), (இசைக்கும்) கட்டியுள்ள (மயிற் பரிமீது) (அல்லது - மகுடமணிவார் - தேவர்கள் இசைக்கும் - போற்றும் -மயில்மீது), (விகடம்) அழகுடன் உலவும் அலங்கார மயில்மீது ஏறி நாள்தோறும் வரவேணும். கருணை நீங்காத கண்ணினள்; சந்தனக் கலவை அழியாத (எப்போதும் விளங்கும்) கொங்கையள்; (உன்னோடு) சேர்க்கை நீங்காத பராக்ரமம் வாய்ந்தவள் (அல்லது சேர்க்கை நீங்காத வேட்டுவச்சி) ஆகிய குறத்தியின் மணவாளனே! விஷம் உடைய பாம்புகளின் வரிசைகொண்ட (சிவபிரானது) சடாமகுடத்தின் மேல்வைத்த (கழல்வீரா) திருப்பாதங்களை உடைய வீரனே! நறுமலர்களை விரும்புகிற திருப்பாதங்களை உடைய வீரனே! (அல்லது - (சிவபிரான் தன்னை வணங்கினதால்) அவரது சடைமுடியில் வைத்திருந்த வாசனை மலர்களை ஏற்றுக்கொண்ட கழலினை உடைய வீரனே!) சிவந்த ரத்னங்களில் அமைந் துள்ள (ஒளிபோன் ற) ஒளி பொருந்திய (மணி) சூரியன் வலம்வரும் வெற்றி விளங்குவதான அருணைநகர் கோபுரத்தில் உறைபவனே! அசுரர்களுடைய குலத்தை வேருடன் அறுத்து வடவாக்கினி போன்ற தீயை அவர்கள்மீது செலுத்தித் தேவர்களைச் சிறையினின்றும் மீள்வித்த (மீட்டுக் காப்பாற்றிய) பெருமாளே! (மயிலின் மிசை ஏறி நித்தம் வரவேணும்)

  • மயிலுக்குச் சேணம், கடிவாளம், அங்கவடி - (விநா - துதி - 3. கந்தர் அலங் - 11)