பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/207

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 524 ஆண்டருள தானதன தானத் தானதன தானத் தானதன தானத் தனதான ஆலவிழி நீலத் தாலதர பானத் தாலளக பாரக் - கொண்டலாலே. ஆரநகை யால்விற் போர்நுதலி னால்வித் தாரநடை யால் நற் கொங்கையாலே, சாலமய லாகிக் காலதிரி சூலத் தாலிறுகு பாசத் துன்பமூழ்கித். தாழ்விலுயிர் வீழ்பட் டூழ்வினைவி டாமற் சாவதன்மு னேவற் கொண்டிடாயோ, சோலைதரு கானிற் கோலமற மானைத்

  • தோளிலுற வாகக் கொண்டவாழ்வே - சோதிமுரு காநித் தாபழய tஞானச்
  1. சோனகிரி வீதிக் கந்தவேளே: பாலகக லாபக் கோமளம யூரப்

பாகவுமை பாகத் தன்குமாரா. பாதமலர் மீதிற் Xபோதமலர் தூவிப் பாடுமவர் தோழத் தம்பிரானே(16) 幫 வள்ளியைத் தோளிற் கொண்டது: . மாதாம் ஓர்மினை எடுத்தே தான்வர - திருப்புகழ் 714 "உரத்தோளிடத்திற் குறத்தேனை வைத்திட் டொளித் தோடும் வெற்றிக் குமரேசா. திருப்புகழ் 534 1 அன்பர்க்கு மெய்ஞ்ஞானச் சோதி விளைக்குமலை - துஞ்ஞானச் சந்தமலை - அண்ணாமலை வெண்பா - 22.

  1. திருப்புகழ் 524, 525 அருணை வீதியில் இருக்கும் வேலவற் குரியன. X போதமலர் - ஞானபூஜைமலர்; ஞானவாசம் வீசிப் ப்ரகாசியா நிற்ப, புட்பமாலை அணிவேனோ - திருப்புகழ் 1211

ஞானபூஜை செய்வார்க்குக் கொல்லாமை, ஐம்பொறி அடக்கல், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு என்பன அட்ட புட்பமாம் (எண்மலர்). "ஞானநெறி நிற்றல் அர்ச்சனை ஒவற வுட்பூசனை செய்யில் உத்தமம்". திருமந்திரம் 1849,