பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை! திருப்புகழ் உரை 209 குற்றமுள்ள மூடனை ஆட்கொள்ள அருளிய (ஆண்டருளிய) கருணைக் கடலே! (வள்ளி - தேவசேனை என்னும்) இரு நாயகிமார்களின் கணவனே! உன்னுடைய தாளிணைகளாம் சிறந்த மலர்களைத் தந்தருளுக. வேதங்களின் சிறந்த மொழிகளை ஒதும் அந்தணனாம் பிரமனும், தேவர்களும் போற்றுகின்ற கேசன் (கேசவன்). 9 ஆயுதபாணி (சங்கம், சக்கரம், கதை (வில்) சார்ங்கம், வாள் (கட்கம்) என்ற ஐவகை - ஆயுதங்களைத் திருக்கரத்திற் கொண்டவன், நல்ல் துளவமாலையை மார்பில் அணிந்துள்ள மாயவன் - ஆகிய திருமாலின் மருமகனே! அழிவிலாத அசுரர் தலைவர்களான (தாரகன் - சிங்கமுகன் - சூரன்) பொடியாம்படி எதிர்த்துப் போர் புரிந்த ஒளிவீசும் வேலாயுதனே! உலகு ஏழையும் வலம் வந்தவனே! யர்கள் கோடிக் கணக்கானவர்களின் சுடர்வீசும் இளமை ஒளி விளங்கும் முகங்கொண்ட மேனியனே! சிவபிரான் அணையும் தேவி (பார்வதியின்) குழந்தையே! நிறைந்த கலைப் புலவனே! அழகிய பொன்மலை மேருபோல் உயர்ந்த கோபுரம், பெரியமதில், ஒலிபெருகும் வேதவீதி - வேதஒலி முழக்கும் வீதி), யானைகள் செல்லும்வீதி இவைகள் உள்ள அண்ணாமலை மாநகரில் விரும்பி உலவும் பெருமாளே! (தாளினை மாமலர் தருவாயே) 528. யானையின் உரித்த தோலையும் பாம்பையும் அணிந்த மேனியர், கலைகள்கொண்ட (ஒளிகொண்ட) திங்களும் கங்கையும் நிறைந்த சடையினர், நெருப்பையும், மழு ஆயுதத்தையும் (பரசையும்), மானையும் ஏந்திய கையினர் . தாமரையில் வாசம் செய்யும் மாது-இலக்குமியின் பருத்த கொங்கையின் பாலை உண்டு வளர்ந்த மன்மதனைக் காய்ந்தழித்தவர் (கோபித்தழித்தவர்), கயிலாயத்தில் அமர்ந்துள்ள ப்பொருளானவர், பரப்பும் ரத்னமும் பொன்னும் நிறைந்த தோளை உடையவர் ஆகிய சிவனது கழுத்தில் (உள்ள) விஷத்தின்