பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை! திருப்புகழ் உரை 211 விரிவோ இது என்னும்படியும், உனது உள்ளத்துக்கு உகந்த வேலாயுதமோ இது என்னும்படியும், மிகவும் இரண்டு காதணி குழைகளையும் நெருங்கி, மன்மதனொத்த அழகுள்ள புருடர்களின் உயிரையே விழுங்கியும், பின்னும் கோபித்தும், நாடுகின்ற செயலினை உடைய கண்களை உடைய மாதர்களின் கொங்கைகள் மார்பிற் பொருந்த விதமிகு (பலவிதமான) காமலீலைகளிற் பொருந்தி, மேனியும் அழகை இழக்கவும், நினைவு அழிந்தும் இறந்துபோகும் (விதி) தொலையாதோ! நெருப்பினை வீசும் கண்கள் இரண்டுடனும், (இருபிறை வாளெயிறு) இரண்டு பிறைபோன்ற ஒளிவீசும் பற்களுடனும், மலை யிரண்டு போன்ற தோள்களுடனும் (கரிய) மேகம் வருவதுபோல வரும் அசுரர்களின் தலைகள் மேருமலை இடிந்து வீழ்வது போல விழ, முதுகு பிளவுபட, (ரணகளத்துக்) காளிகள் தமக்கு இட்ட பலி உணவு என்று நடந்து உனது பாதங்களைத் தொழ, எதிர்த்துப் போர்புரிந்து (அசுரர்களின்) ரத்தத்தை விரும்பின வேகத்துடன் சென்ற வேலாயுதனே! சிங்கம் (அல்லது பாம்பு, பன்றி, குரங்கு), யானை, புலி இவைகள் நெருங்கியுள்ள ஒளிவீசும் மலையாம் திருவண்ணா. மலையில் மிகவும் உயர்ந்த கோபுரத்தில் வீற்றிருக்கும் குமரனே! அளவிலாத வேதங்கள் போற்ற வாழும் ஆறுமுக வடிவை விட்டு விட்டு, வேடர்களின் காட்டில் (இருந்த) பெண் (வள்ளியின்) கொங்கைகளைச் சேரும் புயங்களை உடையவனே! திருமால், சிவன், பிரமன்! இந்திரன் முதலானோர் (ஆகிய இவர்தம்) தம்பிரானே (கலவி பொருந்தி. மாய்வதொழிந்திடாதோ) 529. க்கின் கடலின் உட்புறம் எல்லாம் ப்பங் Qari j#೧೨ கலங்கி iபேட் கிேே பொன்மலை (மேரு) அமையும்படி (மத்தாக) நட்டுக், கூட்டமான படங்களை உடைய விபரீதமான் (அதிசயிக்கத் தக்க நாற்றமுள்ள விஷத்தைக் கொண்ட நாகராஜன் (ஆதிசேடன்).