பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/225

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 534. கலை ஞானம் பெற தனத்தா தனத்தத் தனத்தா தனத்தத் தனத்தா தனத்தத் தனதான அருக்கார் நலத்தைத் திரிப்பார் மனத்துக் கடுத்தாசை பற்றித் தளராதே. அடற்கா லனுக்குக் கடைக்கால் மிதித்திட் டறப்பே தகப்பட் டழியாதே; f கருக்காரர் நட்பைப் பெருக்கா சரித்துக் கலிச்சா கரத்திற் பிறவாதே. கருத்தா லெனக்குத் திருத்தா ளளித்துக் கலைப்போ தகத்தைப் புகல்வாயே: ஒருக்கால் நினைத்திட் டிருக்கால் மிகுத்திட் டுரைப்பார்கள் சித்தத் துறைவோனே. Xஉரத்தோ ளிடத்திற் குறத்தேனை வைத்திட் டொளித்தோடும் வெற்றிக் குமரேசா; செருக்கா தருக்கிச் Oசுரச்சூர் நெருக்கச் செருச்சூர் மரிக்கப் பொரும்வேலா. திறப்பூ தில்த்திற் றிரட் “சோன வெற்பிற் நிருக்கோ புரத்திற் பெருமாளே (26) "கடைக்கால் மிதித்திட்டு - அடிப்படை கோலி f கருக்காரர் பிறவிக்கேதுவாகும் செய்கையோர்.

  1. இருக் கால் இரண்டு திருவடிகளையும், 'நெஞ்சில் ஒரு கால் நினைக்கில் இருகாலும் தோன்றும் முருகாஎன் றோதுவார் முன்" முருகாற்றுப்படை.தனி வெண்பா. இனி, இருக்கு மந்திரங் களால் ஒதுதல் எனலுமாம். சம்பந்தப் பெருமான் திருவாக்காகிய தேவாரத்தைத் தென்னுரல் சிவபத்தி ருக்கு ஐயம் போக உரைத்தோன்" என்றார்; அவர் அருளிய தேவாரம் 'இருக்கு வேதம்" ஆதலால் அவரை இருக்குமொழிப் பிள்ளையார்" என்றார் சேக்கிழார் ப்ெரியபுரா.ஞானசம் - 80.

X திருப்புகழ் -524 714 - பார்க்க O சுரச் சூர் நெருக்கு.சுரர்களாகிய தெய்வத்தன்மையோரை ஒடுக்கிய,

  • சோண வெற்பு என்பது திருவண்ணாமலை