உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருனைl திருப்புகழ் உரை 237 நான் ஒருவன் அடியேன் (தன்னந்தனியனாய்) - இங்கு முறையிட்டலறும் மொழிகள் யாரேனும் ஒருவர் அன்புடன் (உன்னிடம்) வந்து தெரிவிப்பார்களே (அறியேன் நான்) (உனது விசுவரூபத்தில்) உனது திருவடித் தூசானது பூமியில் உள்ள மலைகள் ஆகும்; அத்தகைய பெரியோன்ே! உனது கிருபாகரம் (திருவருட்டன்மை) எத்தகையதோ - அறியேன்) மேலான குருமூர்த்தியா ய், அணுவிலும், அசைவு காட்டுபவனாய், (பவனம்) வாயு முதலான ஐம்பூதங்களாம். படையையும் (சேனைகளையும் - அல்லது ஆயுதங்களையும்) உடையவனே! அFஅதி)ெ உருவாயும். பழைமையாக உள்ள உருவாயும், (பழமை முதல் புதுமைவரை உள்ள சகல வடிவமும்) ஆய் அமைந்த வேலனே! திருமாலும், பிரமனும் அபயம் என்று உன்னிடம் ஒலமிட வேலாயுதத்தை இருள் வடிவம் எடுத்த அசுரன் சூரன்மீது செலுத்தியவனே! (அடிமை) அடியேன்பட்ட பொல்லாநோய் துரளாமாறு (அருளி)த்திருவண்ணாமலையில் வா ழ்கின்ற் பெருமாளே. (உனது கிருபாகரம் ஏதோ) 543. பெரிய வினைகள் (அல்லது நல்வினை தீவினை இரண்டும்) || ஒழிய மலக்கூட்டங்கள் மங்கி அழிய, அஞ்ஞானமும், பிணிக்ளும் ஒடுங்க (நீ) மயிலேறி. மூர்த்தியே ஒலம் ஒலம்' என முறையிட்டனர். இறைவன் உடனே வேலை அந்த இருள்மேல் ஏவ, இருள் உருவம் மாய்ந்து உடனே அழிந்தது. "ஞாலமும் ககன முற்றும் மாயிருள் உருவங் கொண்டு மறைந்துநின் றார்க்க லுற்றான்." "வானோர்.தலைத்தலை சிதறி, நில்லாத தோடினார் ஐய அங்கவன் உயிரை உண்டெம் மாவியை யருளுகென்றார்" வேலை சூரன் ம்ேற் செல்லத் தொட்டான்" "அவுணன் கொண்ட மாயிருள் உருவமுற்றும் வல்விரைந் தகன்ற தன்றே" (கந்தபுராணம் 4.13-456, 459, 462, 464, 165) O இது அருணகிரியார் வரலாற்றைக் குறிக்கும்.