பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/248

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைl திருப்புகழ் உரை 243 எழுதுதற்கு முடியாததான ஆடை தளர்ச்சியுற, ஆசை அதிகரிக்கக் கொப்பூழாகிய மைதரும் சுழிபோன்ற மடுவில் (நீர் நிலையிலே)முழுகி, நட்பு பூண்டு, அந்த வாயிதழ்களின் அமுதத்தை உண்டு, உயிரும் தேகமும் ஒன்றுபோல ஒத்திருந்து, கோபம் வெறுப்பு எல்லாம் தணிந்து நறுமணம் வீசும் மலர்ப் படுக்கையின் மீது படுத்து, முகமெனும் தாமரைமலர் சுருங்க, காம ஆசைகொண்டு, அதில் அழிந்து சொற்கள் பதற (தடுமாற), தன் வசம் கெட்டழிய, அந்த ஆசையிலேயே கவிழ்ந்து முழுகிவிட்ட சமயத்திலும் கூட எல்லாம் உணரும்படியாக அடைந்துள்ள முற்றின மகா தவநிலையிலும், உயர்ந்ததும் குற்றமிலாததுமான வேதத்திலும் நெருங்கி விளங்குவன என்று விரும்பிப் போற்றிசெய்து நின்று முநிவர்களும் தேவர்களும் வணங்கி உருகும் (உனது) பாத தாமரைகளை (நான்) என்றும் மறக்க மாட்டேன். ஒப்பற்ற சிறுவனுடைய (நம்பியாரூரன் என்கிற சுந்தரனுடைய) மணச்சடங்கு நடக்கும்போது, இளைப்புடன் வந்து (அல்லது நடக்கிறதென்று அறிந்துவந்து), கிழ உருவம் கொண்டு வேகமாக முன்வந்து (மண) வாசலிற் புகுந்து, உலகோர் யாவரும் அறிய . இந்தச் சிறுவன் (எனக்கு) அடிமையாம் என ஒரு சீட்டை எடுத்துவந்து சபையோர்களின் மத்தியிலே. ஒரு பழைய, ஒலையில் எழுதப்பட்டு மடித்து (சுருட்டி) வைத்திருந்த பத்திரம் ஒன்றை, வலிவுடன் அந்தச் சிறுவன் வேணுமென்றே பற்றிக் கிழித்தெறிய, அப்போது கைகால்களை உதறிக்கொண்டு இது முறையோ என்று கூச்சலிட்ட பழையவரும், வேதத்தை நன்கறிந்த முதல்வருமான சிவபிரான் தந்த குழந்தையே! என்றாய்; எனக்கு உகந்தது பாமாலை, நீ பித்தா எனத் தொடங்கிப் பதிகம் பாடுவாயாக’ எனக் கூறி மறைந்தனர்; பின்பு சுந்தரரும் அந்த ஆணையைத் தலைமேற்கொண்டு பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா!....அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே - எனப் பாடிக் கசிந்து உருகினர்; பின்பு தலந்தோறும் சென்று பதிகம் பாடி ஈற்றிற் கயிலையை அடைந்தனர். இங்ங்ணம் சுந்தரரை இறைவன் தடுத்தாட்கொண்ட வரலாற்றை அருணகிரியார் இங்கு அருமையாகக் குறித்துள்ளார்.