பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/250

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை! திருப்புகழ் உரை 245 அருமையான உடுபதி (சந்திரனை)த் (துரணாக) இருக்கும்படிச் செலுத்திவைத்துப் பொன்மலையாம் மேரு அல்லது மந்தரம் (என்னும் மத்துடன்) கயிறாக ரத்ன முடிகளை உடைய (வியாளம்) பாம்பாகிய ஆதிசேடனைப் பூட்டி அழுத்தமாக தேவரோடு பலரும் விரைவுட்ன் கடலைக் கடைந்து அமுது வரச்செய்து (அதைத்) (தேவர்களுக்குப்) பகிர்ந்தளித்த திருமாலின் அழகிய னே! சேவலை அன்று நல்ல யோசனையுடன் ஒரு கொடியில் நிறுத்தி ஏந்தி மகிழ்ந்த பெருமாளே! திருவண்ணாமலை நகரில் (உள்ள) (அல்லது ஏழுநிலைக்) கோபுரத்தில் (கோபுரவாயிலில்) எழுந்தருளியுள்ள பெருமாளே! - (பாத பத்மம் என்றும் மறவேனே) 546. நெருங்கி அழுத்தமாயுள்ள அழகிய கொங்கையின் மீதுள்ள முத்துமாலையும் தி உமிழும்படிக் காய்கின்ற சந்திரனுடைய நிலா ஒளியாலும் . வருத்தி என்னுடைய உயிரை அபகரிக்க எழுகின்ற புல்லாங்குழலின் இசையாலும், பொருந்திய கடலின்அலையாலும் - கொடுமை வாய்ந்த ரதிகாந்தனாகிய மன்மதன் செலுத்தும் கொடிய பாணத்தாலும் எளியேன் அழிவுபடாமல் தக்க தருணத்தில் (சமயத்தில்) அழகிய சோலைகள் (அல்லது அழகிய ஞ்சோலைகள்) சூழ்ந்த திரு அண்ணாமலைப் பதியில் உள்ள மலைமேல் வந்தருள் வேண்டும்; கடுமை வாய்ந்த திரிபுரங்களின் வீதிகளில் நெருப்பு எழும்படிப் புன்சிரிப்புச் சிரித்த சிவபிராற்குக் குருநாதனே! எல்லா மலையுச்சிகளிலும் வாசஞ் செய்திருந்த அசுரர்கள் பொடிபட் டழியச் செலுத்தின பச்சை மயில் வீரனே! "கடல் கடைந்து அமுதம் பகிர்ந்தது - பாடல் 509 பக்கம் -162.