பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணைl திருப்புகழ் உரை 265 மன்மதனும், மூன்று புரங்களும், சாம்பலாகும்படி நெருப்பினை வெளிச் செலுத்தினவர் யானை, புலி இவைகளின் தோலையும், சிங்கத்தின் தோலையும் மேற் போர்வையாகக் கொண்டவர்; சடையில் கங்கை, இளம்பிறை, (ஆர்) ஆத்திமாலை சூடியுள்ளவர், ரிஷபவாகனங்கொண்டவர், கடலில் எழுந்த மகா விஷத்தையும் உண்டவர் எந்தை சிவபெருமானொடு கூட அவர் திருமேனியிற் பாதியாக உறையும் எனது தாய் - திருமாலுக்குத் தங்கை, மஹாபத்தினி, அம்பிகை, சங்கரி, ஆசை (அன்புக்கு) உரிய சுந்தரி, வேதாகம நூல்களின் உருவம் வாய்ந்தவள், மூன்று கண்ணை உடையவள், பருத்த கொங்கையள் . அத்தகைய பார்வதி பெற்றருளிய மஹா ஞானக் குமரனே கலாபப் பரியாம் மயில்மேல் திருவடியை வைத்துள்ளவனே! வளமை வாய்ந்த குருமூர்த்தியே! - என்று தேவர்கள் அடிமை பூண்டு பாட சூராதிகள் அழிந்துபோக, மஹா மேருமலையும் மெலிவு அடைய, அழகிய கடலும், அவர்ட கிரிகளும், (அவுட) கஜங்களோடு, ஏழுதிவுகளும் குலையப் பாதாளத்தில் உள்ள விஷப்பாம்பாகிய ஆதிசேஷனுடைய படங்கள் ஆயிரமும் கேடு உறச் சூழ்ந்துள்ள சக்ரவாளகிரி தூள் பட்டுப் பொடிகள் விண்ணிடம் எல்லாம் நிறையும் வண்ணமே நடனம் செய்த வேலனே! X வேதாம - வேதாகம "அருமறைக்கு முன்னாய் நடு எங்குமாய் முடிவாய முதல்வி" அபிராமி அந்தாதி 55. O எனஞ்சுரர் - என அம் சுரர். "என்கிரி - இமயம், மந்தரம், கைலாசம், விந்தியம், நிடதம், ஏமகூடம், நீலம், கந்தமாதனம். என்திசை யானைகள் - ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்பதந்தம், சாருவபூமம், சுப்பிரதீபம் (பிங்கலம்) ttதிபு ஏழ் ஏழு தீவுகள் நாவல்_இறலி, குசை கிரவுஞ்சம் புட்கரம், தெங்கு, கமுகு இவ் வெழுவகைப் பொருளும் அவ்வத் தீவின் மிக்கண ஆகையால் அவற்றால் அத் தீவுகள் பெயர் பெற்றன.

  1. இந்த அடி முருகவேளின் துடிக்கூத்து குடைக்கூத்து இவைகளின் திறத்தை விளக்குகின்றது.