பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/272

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருளை) திரு. ப்புக| ய மயை 207 (நெறி பலகொண்டு சோர்வு உறும் (தளரும்) வேதத்தின் உச்சியின்மேல் விளங்குபவனே! சுகத்துடன் உனது தாமரையன்ன செம்மைக்கரத்துடன் உனது (அகம்) உள்ளத்தையும் பெற்ற அந்த அழகிய குறமாதோடு) வள்ளியுடனும், அற்புதமான விண்ணுலகப் பெண் தேவசேனையுடனும் மகிழ்ச்சியுற்று, நல்ல் அக்கினி ஸ்தம்பமாம் சிவசுடர் உயர்ந்தோடி ஆகாசத்தை அளாவி விளங்கும் அருணாசலத்தில் (திருவண்ணாம்லையில்) விளங்குகின்ற தம்பிரானே! (உடல் மங்குவேனோ) 555. மேகமும் வாசனையும் பெருகி எழும் சோலையில் உள்ள பொல்லாததான குயிலாகிய) எக்காளம் எல்லாம் ஒருசேர ஒலிக்கின்ற அந்தக் காரணத்தாலும் . (கால்) தென்றற்காற்று நெருங்கி, வாசனை ஏற்றியுள்ள படுக்கையின்மேற் செறிந்து வரப், போருக்கு எழுந்த மன்மதன் செலுத்த மேலே வந்த பானங்களாம் ஐந்து மலர்களாலும், ஊராரும் உலகத்தாரும் பழைய பெரிய உகாந்த காலம் வந்ததுபோல ஆரவாரம் செய்வதாலும் (நீ என்மீது மனம் இரங்கி) ஒரு இராப்பொழுதேனும் வந்து என் மனம் நைந்து அழியாதபடிப் பிணங்கியும், எனது இரண்டு கொங்கைகளின் மீது கூடி இணங்கியும், (வரி) இசைப்பாட்டுகளைப் பாடும் வண்டின் கூட்டங்கள் உலவுகின்ற கடப்ப மலர் மாலையைத் தந்தருளுவாயாக. ஆத்தி மலரையும், பாம்பையும், பிறையையும், கங்கையையும் அணிந்துள்ள சடையராம் ஆதி மூர்த்தி (சிவன்) பரவநினைத்த (தியானித்த) குருநாதனே! ஆறுமுகங்களும், குராமலரும், வாகனமாம். மயிலும், குறத்தி வள்ளி அணைந்து ஆட்சிகொள்ளும் திருமார்பும், செல்வமும், அன்பும் உடையவனே!