பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை! திருப்புகழ் உரை 289 565. (சுக்கிலம்) இந்திரியமும், சுரோணிதம் (சுக்கிலத்தோடு கலந்து சிசு உற்பத்திக்குக் காரணமாகும்) மகளிர் இரத்தமும் ஒன்று பட்டுத் தாமரையிலையில் நீர்போல, ரத்தம் நிறைந்து, க்கந்தரும் சுக்கிலத்தாலாய ஒரு குளிகை) மந்திர சக்தியுள்ள ஒரு மாத்திரை அளவைப் பூண்டு கெர்ப்பப் பையில் தோன்றிப் (பின்னர்) அழகிய தொப்பையிடுகின்ற (தாயின்) வயிற்றிலே பெருத்து (வளர்ந்து), மிகவும் அந்த வயிற்றிற் சுழலுதல் உற்று, உடலில் சூடுவரப் பெற்று, மாதம் சொல்லப்பட்ட பத்தாவதில் - (பத்தாம் மாதத்தில்)-மறி) கீழ்மேலாக விழச் செய்யவல்ல எழுத்துக்களின் மந்திர சக்தியாலே வெளியில் தள்ளிவிட, நல்ல இப் பூமியிற் சேர்ந்து, (சேர்ந்ததும்) அழுது, (தாயார்) முலையை (முலைப்பாலை)த் தர, அந்த முலைப்பாலமுதை உண்டு, வளர்வதற்கு வலியின்மையால் பிரயாசைப்பட்டு, தத்தித் தத்தி நடக்கும் நடை அழகைப் பெற்று. நூல்களைப் படித்து, பயனிலா அறிவை அடைந்து, தோகைமயில் போன்ற (பெண்) மக்களின் மோகத்தில் மூழ்கி, விதியினாற் கட்டுண்டு, இவ்வண்ணம் பிறவியை அடைந்து உடலம் (ஈற்றில்) அழிபட இறந்து படுவேனோ! தெற்கிலிருந்த அரக்கர்களின் செருக்கை அழித்து, விபீஷணற்கு விரும்பத்தக்க அரசாட்சியைத் தந்து முத்தியைக் கொடுத்தவரும், அழகிய லக்ஷ சமியை மார்பில் தரித்தவரும், சக்கரத்தை ஏந்தியவரும் ஆன திருமாலின் மருகனே!