பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை (457) 23 வேறும் சிரத்தில் இருந்தன - இவை விளங்கி ஒன்று சேர்ந்து கூடி மணம் வீசும் திருவடியை உடையாள், (சிவபிரான் தனது பாதத்தில் வீழ்ந்து வணங்குவதால் அவர் சிரசில் இருந்த எல்லாப் பொருள்களின் மணமும் தனது திருவடியிற் பொருந்தி வீசப் பெற்றவள், அழகிய தாமரைபோன்ற திருக்கரத்தை உடைய கொடிபோல்வாள், மூன்று கண்கள் கொண்ட கரும்பு போன்றவள், (அ தக்கது அருள்) அந்த தக்கதான பொருளை அருளும் (தனது அடியானுக்கு எது தக்கதோ அதை அறிந்து அருளுகின்ற) பெண், நற் பங்கயவாவி (நல்வாவிப் பங்கயம் - நல்ல திருக்குளத்துத் தாமரையையும். திறைகொளும் - கப்பங் கட்டச் செய்யும் - வென்று அடக்கும், அழகிய, குத்து (திரண்டு குவிந்த) கொங்கையைக் கொண்ட கொம்பு (போல்பவள், அறியும் (ஞானமுள்ள) அம் (அழகிய) தத்தை - கிளி, கைக்கு அகம் கையினிடத்தே மொய்க்கும் பயின்று இருக்கும், திரிபுரை "(சந்திரகண்டம், சூரியகண்டம், அக்கினி கண்டம் என்னும் முப்பிரிவையுடைய சக்கரத்துக்குத் தலைவி), செம்பட்டு ஆடை கட்டியிருக்கும் இடையை உடைய லக்ஷமீகரம் பொருந்திய நங்கை, அழகிய துர்க்காதேவி, சத்தி, எவர்க்கும் தெரிதற்கு அரிதான சுத்தமான பச்சை நிறங்கொண்ட பெண் - ஆகிய பார்வதி தேவியின் பிள்ளையே! தொண்டர்களுக்குச் சித்தி (வீடுபேற்றை) அளிக்கும் பெருமாளே! (பத்தரிருக்கும் குருபதம் சித்திக்கைக்கு அருள் சற்றும்கிடையாதோ')

  • அபிராமி அந்தாதி - (உரை) பக்கம் 5.