பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/306

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை திருப்புகழ் உரை 301 சிவபிரான் வணங்கிக்கேட்க, அவர்முன் நின்று ஆகம ஞானப் பிரசங்கம் செய்த சக்திமானே (வீரனே)! (போர்க்கென்று) போரணிகளை இறுகக்கட்டி நின்று போர்முனைக்கு எழுந்த உயர்ச்சி பெற்ற, கொடிய, சூரனுடைய உடலைப் பிளந்த கூர்மைகொண்ட ஒளிவேலனே! சமணர் அனைவரும் மதுரையில் கூட்டமாகக் கழுமுனையிற் காலூன்றிக் கால் ஊன்றி ஏறும்படி விட்டு நின்ற புதுமைப் பிரானே! பரிசுத்தமான கங்காநதியின் மைந்தனே! அடியவர்க்கு எளியவனே! தேவர்கள் வணங்கும் கந்தபிரானே! குறத்தி (வள்ளியின்) கொங்கையில் அழுந்தும் கடம்பனே! மிகுந்த வல்ல புகழ் விளங்கும் அருணையில் நீண்ட பெரிய கோபுரத்தில் வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமாளே! (வரமெனக் கருள் கூர்வாய்) 568. தமிழின் இனிமைக் குரலைக் காட்டும் குயிலோ, மயிலோ, கோழிதானோ, புறாவோ, கிளியோ, காடையோ (குறும்பூழோ) அன்றிலோ, வண்டோ, என்னும்படிப் (புட்) குரல் வாய்ந்து மிக்க, செம்மையான, தக்கதான, சிறந்த கண்டத்து (புட்குரல்) உடைய மாதர்களின் வாயிதழாம் (பலாச்)சுளை, தேன், பழம் இவையிற்றின் சுவை சேர்ந்ததாம். கொங்கைப்பாரம் மலை என்னும்படிப் பருத்து ஓங்க, (மா - பொறி) அழகிய தேமல் அங்கும் இங்கும் சிதறிட, வேலோவிழி, வில்லோ சிறந்த பிறையோ நெற்றி அல்லது புருவம், மாந்தளிரோ சரீரம், இருளோ கூந்தல், (நகை) பற்கள் விளங்கும் சிறந்த சூரியனது பாயும் ஒளியோ குமிழம்பூவோ மூக்கு இனிய முகம் திங்களோ, குளிர்ந்த செந்தாமரையோ, பொருத்தமாயுள்ள தோடு இரண்டும் விளங்கும் காதுகள், ஊசலோ (ஊஞ்சலோ) கழுத்து அழகிய கமுகோ - கொடியோ, நூலோ இடையானது - எனக் கொண்டுள்ளவர், அன்னம் போல்பவர், பிரியம் காட்டுபவர், பெருமைவாய்ந்த (சிறந்த) மின்னல் கொடி போன்றவர் ஆகிய (பொது) மாதர்களின்