பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/309

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 569. கவலை ஒழிய தனன தனத்தத் தனந்த தனன தனத்தத் தனந்த தனன தனத்தத் தனந்த தனதான தலையை மழித்துச் சிவந்த துணியை யரைக்குப் புனைந்து சடையை வளர்த்துப் புரிந்து புலியாடை சதிரொடு வப்பப் புனைந்து விரகொடு கற்கப் புகுந்து தவமொரு சத்தத் தறிந்து திருநீறு: *கலையை மிகுத்திட் டணிந்துfகரண வலைக்குட் புகுந்து கதறு நிலைக்கைக் கமர்ந்த எழிலோடே. கனக மியற்றித் திரிந்து துவளு மெனைச்சற் றறிந்து கவலை யொழித்தற் கிரங்கி யருள்வாயே: அலைகட லிற்கொக் கரிந்து மருவரை யைப்பொட் டெறிந்து மமருல கத்திற் புகுந்து முயராணை. அருளொடு கைப்பற்றி வந்து மருண கிரிப்புக் கிருந்து மறிவுள பத்தர்க் கிரங்கு மிளையோனே, மலையை வளைத்துப் பறந்து மருவு புரத்தைச் சிவந்து வறிது நகைத்திட் டிருந்த சிவனார்தம். மதலை புனத்திற் புகுந்து நரவடி வுற்றுத் திரிந்து மறமயி லைச்சுற் றிவந்த பெருமாளே. (61 570. பொதுமகளிர் மீது மயக்கு அற தனத்த தானன தத்தன தத்தன தனத்த தானன தத்தன தத்தன தனத்த தானன தத்தன தத்தன தனதான திருட்டு வாணிப விக்ரம துட்டிகள் மதத்த ருபிகள் துர்ச்சன # பொட்டிகள் செகத்து Xநீலிகள் கெட்டப ரத்தைகள் மிகநானார்.

  • கலை - சரீரம் f இந்திரிய வய மயங்கி - திருவாசகம் - கண்ட பத்து -1 # பொட்டிகள் - திருப்புகழ் - 28 பார்க்க X நீலிகள் - திருப்புகழ் 27, 88 (பக்கம் 77.87 கீழ்க்குறிப்பு).