பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/312

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை! திருப்புகழ் உரை 307 வில்லைப் போன்ற புருவத்தையும் சிறந்த நெற்றியையும் உடையவர்கள், முன்னுக்கு விளங்கும் மார்பினை உடைய வர்கள், எச்சில் நிறைந்த உதட்டை உடையவர்கள், சிரிப்பினா லேயே ஆண்மக்களுடைய உள்ளத்தை உருக்குபவர்கள், கண்களாலே வெருட்டி மேலே விழுகின்ற கூத்தாடும் பயினிலிகள், மிக்க பாபம் செய்தவர்கள், வட்டமான முகத்தை மினுக்கிக் காதோலைகளாயுள்ள பித்தளையில் ஆன ஆபரணங்களை அதிகச் சாம்பலிட்டு விளக்கம்பெறச் செய்து குழையணிந்த மாறுபட்ட பேச்சுடையோர்கள் - இத்தகையோர்கள் மீது காதல் கொண்டு நிற்கும் மயக்கத்தை விட்டு நான் மனம் ஒருமைப்பட்டு (ஒருவழியில் நின்று) (உனது) இரண்டு அழகிய திருவடிகளைப் பணிவேனோ - (பணியும் பாக்கியத்தை அடைவேனோ!) தரித்த தோகண....... தக்குகு திக்குகு என்று இசைத்தாள அறுதிகளைப் பெரிய கைகளால் தாளமிட்டும், பொருந்திய மத்தளம், இடக்கை (இடது கையாற் கொட்டும் ஒரு தோற்கருவி), தாளம் இவையெலாம் ஒருங்கே ஒலிக்க அதற்குத் தக நடனஞ் செய்து, ஒளி கொண்ட பேய்கள் தத்திம் தித்தெனக் கூட்டமான பூதங்கள் ಳ್ದ= ஒளி போல ஒளி வீசும் ரத்னங்களால் ஆன சிறந்த கிரீடங்களைக் கொடுக (கொண்டு உக) கொண்டு, அவை சிந்தும்படியாகக் கழல் (கழற்சிக்காய்கள்) கெச்சைக் காய்களைக்கொண்டு விளையாடுதல் போல (அடக் கையாடி) ஜெயம் பெறக் கையில் (வைத்து) விளையாடி மாமிசங்களை எடுத்து உண்ணும்படி, அடியோடு அற்றுப்போய் அசுரருடைய சேனைகள் அழிந்துவிழச் (செறி திருக்கை) திருக்கையிற் செறி - திருக்கையிற் கொண்டுள்ள வேலாயுதத்தைச் செலுத்தியருளிப் போர்செய்த கருணைக் குகனே! திரு அண்ணாமலை நகருள் வீற்றிருக்கும் பெருமாளே! (நான் ஒருமித்து இருபொற்கழல் பணிவேனோ)